பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

612 / அயோத்திதாசர் சிந்தனைகள்

முறையல்லாற், பிறந்த நெறியாலுளதோர் பேருதவியாதோ” வெனக் கூறியுள்ளச் சார்பே போன்ற விரிவாம்.

2.விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

(ப.) சாவாமருந்தெனினும்- அமுதத்திற்கொப்பாய புசிப்பேயாயினும், விருந்து - வந்த விருந்தினரை, புறத்தாத் - வெளியில்விட்டு, தானுண்டல் - தான்மட்டிலும் புசித்தல், வேண்டற்பாற்றன்று - விருந்திரைவோம்பற் கழகன்றாமென்பது பதம்.

(பொ.) தான்புசிக்கப்போவது அமுதத்திற் கொப்பாயாதாயினும் வந்தவிருந்தினரை வெளியில்விட்டுப் புசிப்பதழகன்றா மென்பது பொழிப்பு.

(க.) நல்லபுசிப்பாயிற்றே இவற்றையெவ்வகையால் விருந்தினருக் களிப்பதென்னும் பேரவாவால் விருந்தினரைப்புறத்தே நிறுத்திவிட்டு தான் மட்டிலு மவற்றைப் புசிப்பது விருந்தோம்பலென்னுமொழிக்கே குற்றமா மென்பது கருத்து.

(வி.) விருந்துடனுண்ணுஞ் சோறு அமுதத்திற் கொப்பாயதென்றும் விருந்திலாதுண்ணுஞ்சோறு நஞ்சிற் கொப்பாய தென்றும் உணர்ந்த நாயன் புசிக்கப்போவது அமுதமேயாயினும் வந்த விருந்தினருக்கவற்றை யூட்டித் தானும் புசிப்பது நலமென்பதை விவரித்தல்வேண்டி சாவாமருந்தாயினும் விருந்தினருக்களிக்காது தான்மட்டிலும் புசிப்பது வேண்டற்பாற்றன்றென்று கூறியுள்ளவற்றிற்குச் சார்பாய் தண்டலையார் சதகம் "திருவிருக்குந் தண்டலையார் வளநாட்டிலில் வாழ்க்கை செலுத்துநல்லோர், ஒருவிருந்தாகிலு மின்றியுண்டபகற் பகலோமோ வுறவாய்வந்த, பெருவிருந்துக் குபகாரஞ் செய்தனுப்பியின்னு மெங்கேபெரியோரென்று, வருவிருந்தோடுண்பதல்லால் விருந்திலா துணுஞ்சோறு மருந்துதானே" எனக் கூறிய ஆதாரமே போன்றச் சார்பென்பது விரிவு.

3.வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவத்து பாழ்படுத்த லின்று.

(ப.) வைகலு - பொழுதுவிடிந்தவுடன், வருவிருந்து - விருந்தின ரெப்போது வருவார்களென்று, மோம்புவான் - எதிர்நோக்கி வுபசரிப்பவன், பருவத்து - எக்காலத்தும், பாழ்படுதலின்று - கேட்டிற்கு வாராதென்பது பதம்.

(பொ.) விடிந்தவுடன் விருந்தினரை எதிர்நோக்கி வாழ்பவன் வாழ்க்கைக்கு எக்காலுங் கேடுவாராதென்பது பொழிப்பு.

(க.) அன்பு பொருந்தி அறஹத்துக்களுக்கும், ஆதுலர்களுக்கும் அன்னமிடும் பயனே அவனது சீர்கேட்டையகற்றி சீரளிக்குமென்பது கருத்து.

(வி.) உதயத்தி லெழும்போதே உள்ளன்பு கொண்டு விருந்தினரை நோக்கிநிற்றல் பற்றறுத்தலுக்கோர் படியாக விளங்குதலால் அவனது வாழ்க்கைச் சுகவாழ்க்கைக்கொண்டு எக்காலும் இனிதுபெருவானென்பதற்குச் சார்பாய் அறநெறித்தீபம் "வள்ளல்களாய்வழங்குதலும் வரையறையிற் பெருஞ்செல்வ, மெள்ளற்பாடின்மெயு மினியனவே நுகர்வதுவுந், தள்ளாத விழுநிதியத் தலைப்பட்டந் தீண்டுதலும், வள்ளாது விருந்திரை மிகவோம்பும் பயனன்றே" என விருந்தினது பயனை விளக்கிய விரிவாம்.

4.அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்.

(ப.) அகனமர்ந்து - உள்ளன்பு கொண்டு, செய்யாளுறையு விருந்தோம்புபவளில்லாவிடின், முகணமர்ந்து - முகமலர்ச்சியுடன், நல்விருந் - விவேகமிகத்தோர் விருந்தினை, தோம்புவானில் - செய்வதற் கில்லாமற் போவானென்பது பதம்.

(பொ.) முகமலர்ந்தன்னமிடும் இல்லோனிருப்பினும் அகமகிழ்ந் தன்னமிடும் இல்லாளில்லாமற் போவாளாயின் விருந்தோம்பற் பயனில்லை யென்பது பொழிப்பு.