பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 / அயோத்திதாசர் சிந்தனைகள்

துலாலக்கினங் கூடிய வைகரையில் தனது உண்மெய்யை பஞ்சவரண சோதி மயமாகக் கழட்டி பொய் மெய்யை அந்தியகாலஞ் செய்தார்.

சங்க அறர் அந்தியமான காலமாகையால் சங்கறாந்தி காலமென்றும் சங்கராந்தியென்றும் வழங்கிவருகின்றார்கள்.

யாப்பருங்கலக்காரிகை

வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலை மேல் வம்பனுங்க
கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்த
சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தன் சொன்முறையான்
மனையற முந்துற வற்கும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதெரிந்து விடொடு கட்டிவை யுரைத்த
தொன் மெய்சால்கழி குணத்தெந் துறவாகைத் தொழுதேத்த
நன்மெய்சால் வீடெய்துமாறு.

வீரசோழியம் - மனையறம்

கொடுத்தலு மளித்தலுங் கோடலு மின்மையும்
ஒழுக்கத்தொடு புணர்தலும் புணர்ந்தோர்ப் பேணலும்
வழுக்கிற் பிறவு மனையறவகையே.

துறவறம்

துறவு மடக்க முந்தூய் மெயுந்தவமும்
மறவினை யோம்பலும் மரத்தினை மறுத்தலும்
மனையினீங்கிய முனைவர்தம் மறமே.

- 1:26; டிசம்பர் 11, 1907 –


மணிமேகலை

காயங்கரையெனும் பேரியாற் றடைக்கரை / மாயமின் மாதவன் றன்னடி பணிந்து
காசின் மாநகர் கடல்வயிறு புகாமல் / வாசவன் விழாக்கோல் மறவேனென்று.

விம்பாசாரம்

இறைமகற்காத னெண்பா னைந்திற் / குறைமிகுகாலக் கூற்றங்கடிந்து
தக்கக்கடை நாட்டனுவா திரையிற் / பக்கமங்கலம் பருமதிகோலாய்
போதி நீழற் பொருந்திய புத்தேள் / சோதி பஞ்சகச் சூழொளியாகி
ஆனவைகரை யார்ப்ப வானவர் / போனக (தெளிவில்லை) விழாக்கோள்.

சங்க மித்தர், சங்க தருமர், சங்க அறரென்று வழங்கிய ததாகதர் அந்தியமான நாளை பூர்வ புத்தமத அரசர்கள் வருடந்தோரும் மார்கழிமாத முதல் இருபத் தெட்டுநாள் வரையில் தங்கள் தேசங்களிலுள்ளக் குடிகளை வீடுவாசல் முதலியவைகளை சுத்தஞ்செய்து, தோரண முதலியவைகள் கட்டுவித்து, வீதிகள் முழுமையும் புதுமணற் பரப்பி, வாழைக் கரும்பு முதலியவைகள் நட்டு, தேச முழுமையும் அலங்கரித்து கடைநாளை போதிபண்டிகை என்றும், தீபசாந்தி நாளென்றும், இந்திரவிழாவென்றும் விடியற்காலத்தில் தீபங்களையேற்றி சோதிமயங் கொண்டாடிவந்தார்கள்.

மணிமேகலை

மேலோர் விழைய விழாக்கோ லெடுத்த
நாலேழ் நாளினு நன்கினி துறைகென
மன்னன் கரிகால் வளவ நீங்கியநாள்
தோரண வீதியும் தோமறு தொட்டியும்
பூரணகும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவைவிளக்கும் பலவுடன் பரப்பு மின்
காய்குலைக்கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியுங் கரும்பு நடுமின்
பத்திவேதிகை பசும் பொற்றூணத்து
முத்துத்தா மமு முறையொடு நாற்றுமின்
விழவுமலி மூதூர் வீதியு மன்றமும்
பழமணல்பாற்றுமின் புதுமணல் பரப்புமின்
கதலிக் கொடியும் காமனறு விலோதமும்
மதலை மாடமும் வாயிலுஞ் சேர்த்துமின்
நாவலோங்கிய மாபெருந்தீவினுட்
காவேற் றெய்வந்தேவர் கோற்கெடுத்த
தீபசாந்தி செய்தருணன்னாள்.