பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/646

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

636 / அயோத்திதாசர் சிந்தனைகள்


5.எளிதென வில்லிறபபா னெய்து மெஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

(ப.) எளிதென - அற்பமாகக் கருதி, வில்லிறப்பா - அன்னியன் மனையாளை யாளுவோனுக்கு, னெய்துமெஞ்ஞான்றும் - எக்காலும்பெறக்கூடிய, பழி - நிந்தையானது, விளியாது - வெளியிற் செல்லாவிடினும், நிற்கும் - அவரவர்கள் மனதிற்றங்கியிருக்குமென்பது பதம்.

(பொ.) அன்னியன் மனையாளை சேருதல் அற்பமென்று எண்ணு வோனுக்கு உண்டாம் நிந்தையானது அவ்வவர் உள்ளத்தில் எஞ்ஞான்றுந் தங்கியிருக்கும் என்பது பொழிப்பு.

(க.) அன்னியன் தாரத்தை இச்சிப்பதையும் அவள்மனை சேறுவதையும் எளிதென்று எண்ணி சேருவோனுக்கு உலகமக்கள் பழியானது வெளிவிடாவிடினும் அவரவர் உள்ளத்தே ததும்பி நிற்கும் என்பது கருத்து,

(வி.) பல்லோரறிய பறையறைந்து வரவழைத்த சாட்டிகள் முன்னிலையில் சேர்ப்பித்த ஒருவன் மனையாளைக் கெடுப்பது அவன் குடும்பத்தையே கெடுத்ததற்கு ஒப்பாதலின் அக்கொடுஞ்செயலை நாவிட்டு விளியாவிடினும் சேர்ந்துள்ள மக்கள் உள்ளத்தில் எக்காலும் பழி ஊன்றி நிற்குமென்பதற்குச் சார்பாய் நாலடிநானூறு "பல்லாரறியப் பறையறைந்து நாட்கேட்டுக், கல்யாணஞ்செய்துக் கடிப்புக்க-மெல்லியற், காதன்மனையாளு மில்லாளா வின்னொருவ, னேதின் மனையாளைநோக்கு” என்பது கொண்டு உலகோருக் குள்ளப் பழியை யறிந்தேனும் அன்னியன் மனையாள் நோக்கை அகற்றவேண்டு மென்பது விரிவு.

6.பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.

(ப.) பகை - விரோதம், பாவ - கொடுஞ்செயல், மச்சம் - பயம், பழி - நிந்தை, யெனநான்கு - என்று சொல்லப்பட்ட நான்கும், மிகவாவா - நாளுக்குநாள் அதிகரிக்குமாம், மில்லிறப்பான்கண் - அன்னியன் மனையாளை யிச்சித்துழலுவோனுக்கென்பது பதம்.

(பொ.) அன்னியன் மனைவியை இச்சித்து உழலுவோனுக்கு விரோதமும், கொடுஞ்செயலும், பயமும், நிந்தையும் நாளுக்குநாள் அதிகரிக்குமென்பது பொழிப்பு.

(க.) அன்னியனுடைய தாரத்தின் இச்சையைப் பெரிதென்று எண்ணித் திரிவோனுக்கு மாளா விரோதமும், தீராக் கொடுமெயும், ஆறா பயமும், பேராப்பழியும் பெருகிக்கொண்டே வருமென்பது கருத்து.

(வி.) தனது தாரத்தை மற்றொருவன் இச்சிக்குங்கால் தனக்குள்ளெழும் விரோதத்தையும், தனக்குள்ளெழுங் கொடுஞ்செயலையும், தன்னால் அவனுக்குத் தோன்றும் பயத்தையும், தன்னாலும் தனது சுற்றத்தாராலும் அவனுக்குண்டாம் பழியையும் தன்னில் தானே ஆராய்ந்துணராது அன்னியன் தாரத்தை இச்சித்து பகையையும் பழியையும் பாவத்தையும் பயத்தையும் மாளாது சேர்த்துக் கொள்ளுவது யாதுசுகம் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "பழியொடு பாவத்தை பாராய்நீ நன்றுக், கழிபெருங் காமனோய் வாங்கி-வழிபடா, தோடுமனனே விடுத்தென்னை விரைந்துநீ, நாடிகொள் மற்றோரிடம்" என்பதுகொண்டு அன்னியன் மனையாளை நாடுவதிலும் தன்னை நாடுவது அழகென்பது விரிவு.

7.அறனியலா னில்வாழ்வா ளென்பான் பிறனியலாள
பெண்மெ நயவா தவன்.

(ப.) னில்வாழ்வா னென்பான் - இல்லறவாழ்க்கையை யுடையோன், அறனியலா - யாதொரு தர்மத்தைச் செய்யாதிருப்பினும், பிறனியலாள் - அன்னியன் மனையாளாம், பெண்மெ - இஸ்திரீயை, நயவாதவன் - இச்சியாதவனே இல்வாழ்க்கைக் குடையோனென்பது பதம்.