பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

652 / அயோத்திதாசர் சிந்தனைகள்


2.உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
லெண்ணப்பட வேண்டா தோர்.

(ப.) சான்றோரா - விவேகமிகுத்தவர்கள், லெண்ணப்பட - கருத்திலும், வேண்டாதார் - இச்சியாத, கள்ளை - மதுவினை, உண்ணற்க - பலரறியவு மருந்தலாகாது, யுணிலுண்க - ஒதிங்கியு மருந்தலாகாதென்பது பதம்.

(பொ.) விவேகமிகுத்தவர்களால் கருத்திலும் இச்சியாதக் கள்ளினை பலரறியவும் அருந்தலாகாது அடக்கத்திலும் அருந்தலாகாது என்பது பொழிப்பு.

(க.) விவேகிகளாம் சாதுக்களால் உள்ளத்திலும் இச்சியாத கள்ளினை பலர் காணவும் குடிக்கலாகாது காணாதுங் குடிக்கலாகாது என்பது கருத்து.

(வி.) சாதுக்களாகிய பெரியோர் தங்கள் இதயத்தின் கண்ணும் இச்சியாது அகற்றி வைத்துள்ளக் கள்ளினை மக்கள் பலர் காணவும் அருந்தலாகாது பலர் காணாதும் அருந்தலாகாது என்பதற்குச் சார்பாக அறநெறிச்சாரம் “ஒளியுமொளிசான்ற செய்கையுஞ் சான்றோர், தெளிவுடையரென்றுரைக்குந் தேசும் - களியென்னும், கட்டுரையாற் கோதப்படுமேல் இவையெல்லாம், விட்டொழியும் வேறாய் விரைந்து” என்ற கள்ளினை இச்சித்தலே தகாது என்பது விரிவு.

3.ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

(ப.) ஈன்றாண் - பெற்றவளே, முகத்தேயு - பிள்ளையின்முகத்தை, மின்னாதா - பார்க்க அருவெறுக்குங்கால், லென்மற்று - மற்றவேறாம், சான்றோர் - பெரியோர்கள், களி - கள்ளினை, முகத்து - நோக்குவரோவென்பது பதம்.

(பொ.) பெற்றவளே கள் குடித்துள்ள தன் பிள்ளையின் முகத்தைப்பார்க்க அருவெறுக்குங்கால் மற்றும் வேறாம் பெரியோர்கள் கள்ளினைக் கண்ணிலும் நோக்குவரோ என்பது பொழிப்பு.

(க.) கள்ளினைக் குடித்து வெறித்துள்ளப் பிள்ளையின் முகத்தை ஈன்றெடுத்த தாயே பார்க்க இச்சியாதபோது மற்றும் வேறாம் பெரியோர்கள் அக்கள்ளினை கண்ணிலும் பார்ப்பரோ என்பது கருத்து.

(வி.) ஈன்று அமுதூட்டி எறும்பு அணுகாது காத்து இரட்சித்தத் தாயானவள் கள்ளினைக் குடித்து வெறித்துள்ளத் தன் பிள்ளையின் முகத்தைப்பார்க்க அருவெறுக்குங்கால் வேறாய சாதுக்கள் அக்கள்ளினை தங்கள் முகத்திலும் நோக்குவாரோ, நோக்கார்கள் என்பது விரிவு.

4.நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

(ப.) கள்ளென்னும் - மதுவினை யருந்தும், பெருங்குற்றத்தார்க்கு - மிகுக் கொடியோர்களை, நாணென்னு - அச்சமிகுத்த, நல்லாள் - பதிவிரதையும், பேணா - இச்சியாது, புறங்கொடுக்குங் - முகத்திருப்புவாளென்பது பதம்.

(பொ.) மதுவினை அருந்தும் மிகுக்கொடியோர்களை அச்சமிகுத்தப் பதிவிரதையும் இச்சியாது முகந்திருப்புவாள் என்பது பொழிப்பு.

(க.) கள்ளினை அருந்துங் கணவர்கள் கொறூர முகத்தைக் காணற்கு அஞ்சி தனது இல்லாளும் முகத்திருப்பஞ் செய்துக்கொள்ளுவாள் என்பது கருத்து.

(வி.) பெரியோர் இச்சித்தற்குத் தகுதியற்றதாய கள்ளினை அருந்துங் கொடியோர்கள் முகத்தை தங்கள் இல்லாள்களாகும் நல்லாளும் பார்ப்பதற்கு அஞ்சி தங்கள் தங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்ளுவார்கள் என்றும் தன் மனைவியும் வெறுத்துப்புறம் போவாள் என்பது விரிவு,

5.கையறி யாமெ யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமெ கொளல்.

(ப.) கையறியாமெ - அநுபவத்திற் கண்டறியாதோன், யுடைத்தே தன்னிடத்துள்ள, பொருள்கொடுத்து - பணங்கொடுத்து குடித்து, மெய்யறியாமெ