பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/674

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

664 / அயோத்திதாசர் சிந்தனைகள்


7.பகச்சொல்லிக் கேளிர் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடறேற்றா தவர்.

(ப.) பகச்சொல்லி - ஒருவருக்கொருவரை பிரிக்கத்தக்க பழிகூறி, கேளிர் - நேயத்தை, பிரிப்பர் - பிரித்துவிடுவார்கள். நகச்சொல்லி - எதிரிகளின் மனமகிழப்பேசி, நட்பாட - நேசிக்க, றேற்றாதவர் - தகுதியற்றவர்களென்பது பதம்.

(பொ.) ஒருவருக்கொருவரைப் பிரிக்கத்தக்கப் பழிகூறி நேயத்தைப் பிரித்துவிடுவார்கள், எதிரிகளின் மனமகிழப்பேசி நேசிக்கத்தகுதியற்றவர்கள் என்பது பொழிப்பு.

(க.) எதிரிகளின் மனதை மகிழச்செய்து, நேசிக்கத் தகுதியற்றவர்கள் ஒருவருக்கொருவரைக் காணாவிடத்துப் புறங்கூறி அவர்களது நேயத்தைப் பிரித்துவிடுவார்கள் என்பது கருத்து.

(வி.) எதிரியுடன் இனியமொழி கூறி இதமகிழச்செய்து நேசிக்கத் தகுதியும் விவேகமும் அற்றவன் அவனது அன்புக்குரிய நேயனைப் பிரிக்கத்தக்கப் புறங்கூறி அவனைப்போல் தன்னை நேசிக்கும் பழிவழி தேடுவார் என்பது விரிவு.

8.துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகோ லேதிலார் மாட்டு.

(ப.) துன்னியார் - தனதுரவின் முறையார்களது, குற்றமுந் - குறைகளையே, தூன்று - புறங்கூறும், மரபினா - உரவினன், லேதிலார்மாட்டு - அன்னியரது குற்றங்களை, ரென்னகோ எவ்வகை சொல்லுவானோவென்பது பதம்.

(பொ.) தனது உரவின் முறையோர்களது குற்றங்களையே புறங்கூறும் உரவினன் அன்னியர் குற்றங்களை எவ்வகை சொல்லுவானே என்பது பொழிப்பு.

(க.) தனது சுற்றத்தோரது குறைகளையே புறம்பிற் கூறித்திரிபவன் ஏனையோர்க்குள்ள குறைகளை இன்னுமின்னும் எடுத்துக்கூறுவான் என்பது கருத்து.

(வி.) தனது சுற்றத்தோரது குறைகள் யாவுந் தன்னைச்சார்ந்ததென்று உள்ளுணராது அவற்றைப் புறம்பே கூறித்திரிபவன் அயலாரது குற்றங்களை மேலுமேலுங் கூசாது கூறித்திரிவான் என்பது விரிவு.

9.அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

(ப.) அறனோக்கி - தன்மநெறிகளையே ஆதாரமாக நோக்கி, யாற்றுங்கொல் - ஆறுதலடையும், வையம் - உலகமானது, புறனோக்கி - அன்னியர்மீது, புன்சொலுரைப்பான் - தீங்குரைப்போனை, பொறை - பொறுக்காதென்பது பதம்.

(பொ.) தன்மநெறிகளையே ஆதாரமாக நோக்கி ஆறுதலடையும் உலகமானது அன்னியர்மீது தீங்குரைப்போனை பொறுக்காது என்பது பதம்.

(க.) அறநெறியினின்று ஆறுதலுற்று வாழ்கவேண்டிய வையகத்தோர் புறங்கூறித்திரிவோன் செயலைப் பொறுக்கார் என்பது கருத்து.

(வி.) வாழ்க்கைத்துணைநலம்கோறி அறநெறிவழுவாது வாழ்கவேண்டிய விருப்பமுடைய வையகத்தோர் புறங்கூறித்திரியும் பேதையின் புன்செயலைப் பொறுக்கார் என்பது விரிவு.

10.ஏதிலார் குற்றம் போற் றங்குற்றங் காண்கிற்பின்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு.

(ப.) ஏதிலார் - தனக்கு அன்னியமானவர்களது, குற்றம் போற் - குறைகளைக் காண்பதுபோல், றங்குற்றங் - தனது குறைகளை, காண்கிற் - கண்டுணர்ந்துக் கொள்ளுவானாயின், பின் - பிறகு றீதுண்டோ - வேறு தீங்குகளுண்டோ , மன்னுமுயிர்க்கு - அன்னிய சீவப்பிராணிகளுக்கு என்பது பதம்.