பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வமருலகு தானின்ன தடி யடைந்த தென்கோ
விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தாயென்கோ
நீ விரித்தவாறே மெய்ப்பொருள் விரிந்த தென்கோ
தெளியாமலில்லை நின்றிருவடிகண் மெய்மை
தெளிந்தாலுஞ் செவ்வனே தெரிந்துரைக்கலாமே.

விண்டாங்கு வெவ்வினை வெரு உதிர நூறி
விரிகின்றமெஞ்ஞான சுடர்விளக்கு மாட்டிக்
கண்டார்கணின்னிலமை கண்விளக்கப்பட்டுத்
தண்டா அமரை மலரின் மேனடந்தாயென்றுந்
தமனீயப் பொன்னணையின் மேலமாந்தா யென்றும்
வண்டார சோகினிழல் வாய மர்ந்தா யென்றும்

வாழ்த்தினால் வாராயோ வானவர்தங் கோவே
போர் செங்கணெடு மாலே செறிந்திலங்கு சோதித்
திருமுயங்கு மூர்த்தியாய் செய்யதாமரையி
னங்கண்டி வைத்தருளு மாதியா யாழி
படம் யறவரசே யென்று நின்னடி பணிவதல்லா
லெங்கணிட ரகலு மாறிந் நிலைமை யெய்தி
யிருளுலக நீக்குமரு டருகநீ யென்று
வெங்கணிருவினையையறவென்றாய் முன்னின்று
விண்ணப்பஞ் செய்யும் விழுத்த கைமையுண்டோ.

சங்கறாந்தி என்பதை சில சரித்திரங்களில் அறுப்புகால முடிவென்று கூறி இருக்கின்றார்கள். இப்பண்டிகை நஞ்சை அறுப்புகால முடிவில் வருகிறபடியால் அவ்வகையாக சொல்லும்படி நேரிட்டதல்லாமல் அதினந்தரார்த்தம் அஃதன்று.

- 1:28; டிசம்பர் 25, 1907 –

11. காமன் பண்டிகை விவரம்
வீரசோழியம்

போதி நிழலிற் புநிதன் பொலங்கழல் / ஆதியுலகிற் காம்.
அணிதங்கு போதிவாமன் / பணிதங்கு பாதமல்லாற்
றுணி பொன்றிலாத தேவர் / மணி தங்குபாத மேவார்.

உலகத்தில் தோன்றும் மநுட சீவர்களுக்குள் புறப்பொருட் காலம் என்றும் அகப்பொருட் காலம் என்றும் இரு வகையாக முன்னோர்கள் வகுத்திருக்கின்றார்கள். அதில் புறதேக விளக்கமாகிய கடபடாதிகளுக்குள் பதினாறுவயதுக்கு உட்பட பாலகாலம் என்றும் இருபத்தைந்து வயதுக்குட்பட குமாரகாலமென்றும் நாற்பதைந்து வயதுக்குட்பட அரசகாலமென்றும் எழுபதுவயதுக்குட்பட மூப்புகாலம் என்றும் நூறு வயதுக்கு உட்பட மரணகாலம் என்றும் கூறப்படும். அகதேகி விளக்கமாகிய இன்ப நிலைக்கு ஒரு தலைக்காமம் அன்புடைக் காமம் பொருந்தாக் காமம் என்றும் கூறப்படும்.

இவ்வகையான தேக தோற்றத்திற்கும் செயலுக்கும் கொடுத்திருக்கும் பெயர்களில் சகல துக்கத்திற்கும் காரணமானது மரணகாலமும் சகல பற்றுதலுக்குங் காரணமானது பொருந்தாக் காமமுமா இருக்கிறபடியால் அதை சிலேடை சிறப்பில் (காலம்) எனும் வார்த்தையிலுள்ள மகர ஒற்றை நீக்கி னகரஒற்றைச் சேர்த்து (காலன்) எனும் ஆண்பால் விகுதியாக்கி விவேகிகள் விளக்கி வைத்ததுபோல (காமம்) எனும் வார்த்தையிலுள்ள மகர ஒற்றை நீக்கி (காமன்) எனும் னகர ஒற்றைச் சேர்த்து ஆண்பால் விகுதியால் உருவகப்படுத்தி இன்பத்தைக் கரும்பின் வில்லாகவும் ஐம்புல நுகர்ச்சியை ஐம்மலர் கணைகளாகவும் ஐம்பொறிகளின் அவத்தையை அதின் பலனாகவுங்காட்டி சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்னும் ஐவகை துன்பங்களை விளக்கி வைத்தார்கள்.

இத்தகைய துன்பங்களில் ஒவ்வொரு மநுட தேகங்களும் அழுந்தி இருப்பது அநுபவமாயிருக்கிறபடியால் காமம் எனும் இன்பத்தையும் அதின் துன்பத்தையும் அதை ஜெயிக்கும் நிலையையும் அறியத்தக்க ஞான உணர்ச்சியையும் ஆதியிற் கண்டடைந்தவர் ஒருவருண்டு. அவர் யார் என்பீரேல்.