பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

670 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) புருடனே பெண்ணுக்கு ஒப்பாகவும் பெண்ணே புருடனுக்கு ஒப்பாயிருந்து இல்வாழ்க்கை நடைபெற்றுவருமாயின் இறந்தும் பிறந்த போதினும் வினைக்கீடாயப் புருடச்செயலற்று வீரமற்று வீணாவான் என்பதில் பிறவி உண்டென்பதற்குச்சார்பாய் அறநெறிச்சாரம்“இறந்த பிறப்பிற்றாஞ்செய்த வினையைப், பிறந்த பிறப்பாலறிக - பிறந்திருந்து, செய்யும் வினையாலறிக வினிப்பிறந், தெய்தும் வினையின்பயன்” எனக் கன்மத்திற்கு ஈடாய தோற்றம் உண்டென்றுணர்ந்த பெரியோன் மறுமெயில் வினையாண்மெ விரெய்தலின்று என்று கூறிய விரிவு.

5.இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல்.

(ப.) இல்லாளை - தன் மனையாளுக்கு, யஞ்சுவா - பயந்து நடப்பவன், மற்றெஞ்ஞான்று - மற்று மெக்காலத்தும், நல்லார்க்கு - சான்றோர்க்கு, நல்லசெயல் - தன்மஞ்செய்தற்கும், னஞ்சு - அஞ்சு பயப்படுவானென்பது பதம்.

(பொ.) தன் மனையாளிக்கு பயந்து நடப்பவன் மற்றும் எக்காலத்தும் சான்றோர்க்கு தன்மஞ் செய்தற்கும் பயப்படுவான் என்பது பொழிப்பு.

(க.) எப்போதும் தன் மனைவிவாக்குக்கு அடங்கியும் அவளுக்கு பயந்தும் நடந்துவருகிறவன் அருந்தவ னல்லோருக்குந் தன்மஞ்செய்வதற்கு அஞ்சுவான் என்பது கருத்து.

(வி.) எப்போது ஒருபுருஷன் தன்மனைவியை அடக்கியாளாமல் பயந்தும் அவள் வாக்குக்கடங்கியும் நடக்க ஆரம்பிப்பானாயில் அருந்தவ நல்லோர்களுக்கு தன்மத்தைச்செய்து சுகம்பெறுதற்கும் பயப்படுவதுடன் தன் தந்தைதாயாருக்கும் பந்துமித்திரருக்கும் இட்டுண்பதற்கும் பயந்து ஏனையோருக்குமோர் உதவியற்றவனாய் ஆண்மெயும் வீரமும் அற்றுப்போவான் என்பது விரிவு.

6.இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா
ளமையார்தோ ளஞ்சு பவர்.

(ப.) இமையாரின் - கண்ணிமை யற்ற தேவர்போல், வாழினும் - இல்வாழ்க்கை பெறினும், யில்லா - மனையாளின், ளமையார்தோ - அடங்கா செயல்களுக்கு, ளஞ்சுபவர் - பயந்துநடப்போர், பாடிலரே - யாதொரு பயனுமற்றவர்களே யென்பது பதம்.

(பொ.) கண்ணிமையற்ற தேவர்போல் இல்வாழ்க்கை பெறினும் மனையாளின் அடங்காச்செயல்களுக்கு பயந்து நடப்போர் யாதோர் பயனுமற்றவர்களே என்பது பொழிப்பு.

(க.) இரவு பகலற்ற வானவருக்கு ஒப்பாக இல்லத்தின் கண் சுகவாழ்க்கைப்பெற்றிருப்பினும் தன்மனையாளின் இன்பத்தையே பெரிதென்று எண்ணி அவளுக்கு பயந்து நடப்போன் யாதொரு பயனையும் அடைய மாட்டான் என்பது கருத்து.

(வி.) இரவென்றும் பகலென்றும் கண்ணிமையில்லா தேவர்க்கு ஒப்பாக சுப்ரதீபங்களால் அமைத்த மாடமாளிகைகளில்வாழினும் அம்மனையோன் மனையாளின் சொற்கடவாது அவ்வில்லத்திலேயே அழுந்தி கிடப்பானாயின் அவனது ஈடேற்றத்திற்கேற்ற விசாரிணையும் அறநெறியுமற்ற புருடச்செயல் என்னும் பயனில்லாமற்போவான் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "பெண்விழைவார்க்கில்லை பெருந்தூய்மெ பேணாதூன், உண்விழைவார்க் கில்லை யுயிரோம்பல் - எப்பொழுதும், மண்விழைவார்க்கில்லை மறமின்மெ மாணாது, தண்விழைவார்க்கில்லை தவம்" என்பது கொண்டு பெண்ணினது வாய்சொற் கடவாதோருக்கு பெருஞ் சிறப்பில்லை என்பது விரிவு.

7.பெண்ணேவல் செய்தொழுகு மாண்மெயி னாணுடைப்
பெண்ணே பெருமெ யுடைத்து.

(ப.) பெண்ணேவல் - மனையாள் சொற்கடவாது, செய்தொழுகு - அவள்சொல்லுந் தொழிலைச் செய்துவருவோன், மாண்மெயி - புருட