பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/690

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

680 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) ஏதுமற்ற ஏழைகளுக்கு ஈவதே ஈகையாகும் மற்றுமுள்ள ஈகைகள் யாவும் தாம் கோறும் ஓர்பயனைக்கருதி ஈயும் ஈகைக்கு நேராயதாம் என்பது கருத்து.

(வி.) மநுமக்களுள் யாது தொழிலுஞ் செய்தற்கற்ற ஏழைகளுக்கும் பிணியடைந்து வருந்துவோருக்கும், திக்கற்ற வறியருக்கும் சீவகாருண்யங் கொண்டு உண்டிகொடுத் தாதரித்தலே உயிர் கொடுத்தற்கு ஒப்பாகும். மற்றும் கருணையும் அன்புமற்று ஈயும் ஈகையானது ஓர் பயனைக்கருதி ஈயும் ஈகைக்கு நேராதலின் அஃது பயன் தாராதென்று எண்ணிய பெரியோன் பிரிதி பலன் கருதாது காருண்யமிகுத் தீயுந் தானமே பயனுடைத்தாம் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “செல்வத்தைப் பெற்றோர் சினங்கடிந்து செவ்வியராய், பல்கிளையும் வாடாமற்பாத்துண்டு நல்ல, தானமறவாத தன்மெயரே லஃதென்பார், வானகத்து வைப்பதோர் வைப்பு” என்பதுகொண்டு பிரிதிபலன் கருதாது ஈயும் ஈகையே ஈகை என்பது விரிவு.

2.நல்லா ரெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று.

(ப.) நல்லாரெனினுங் - பிரிதிபலனை யளிக்கும் நல்லவர்களாயினும், கொளறீது - அவர்களிட மப்பலனைப் பெறுதல் கொடிய தாம், மேலுலகம் - வானராட்சியம், மில்லெனினும் - இல்லாவிடினும், மீதலே - தானஞ்செய்தலே, நன்று - நல்லதாமென்பது பதம்.

(பொ.) பிரிதிபலனை அளிக்கும் நல்லவர்களாயினும் அவர்களிடம் அப்பலனைப் பெறுதல் கொடியதாம். வானராட்சியம் இல்லாவிடினும் தானஞ்செய்தலே நல்லதாம் என்பது பொழிப்பு.

(க.) தானத்தைப் பெற்றவர்கள் நல்லவர்களாய் இருந்து பிரிதிபலனைச்செய்ய அதனைப் பெறுவதாயின் அஃது செய்த தன்மத்திற்கே கேடாக முடிதலான் கொடிதென்று கூறி வானராட்சியம் இல்லை என்பதாயினும் ஈகையின் செயலே இனிய பயனளிக்கும் என்பது கருத்து.

(வி.) ஒருவர்செய்த நன்றியாம் நல் உபகாரத்தை மறவாத நன்றியறிதலுள்ள நல்லோர்கள் அவ்வீகைக்குப் பிரிதியீகை செய்யவும் அதைப்பெறுவதுமாயின் தான் உள்ளன்புடனும் உதாரத்துவத்துடனும் ஈய்ந்த ஈகையின் பயன் கெட்டுப்போகின்றபடியால் அதனைக் கொடியதென்றும் வானராட்சியமென்னும் ஓர்பயனையுங் கருதாது ஈவதே ஈகை நலமாதலின் மேலுலகம் இல்லாவிடினும் வறியார்க்கு ஈவதே இனிதாம் என்பது விரிவு.

3.இலனென்னு மெவ்வ முரையாமெ யீதல்
குலனுடையான் கண்ணே யுள.

(ப.) இலனென்னு - வறியார்க் கில்லையென்று, மெவ்வ - எவ்வகையானு, முரையாமெ - கூறாதவனாகி, யீதல் கொடுக்குஞ்செயலானது, குலனுடையான் - நல்ல குடும்பத்திற் பிறந்தவன், கண்ணே - இடத்தே, யுௗ - உள்ளதாமென்பது பதம்.

(பொ.) வறியார்க்கு இல்லை என்று எவ்வகையானுங் கூறாதவனாகி கொடுக்குஞ்செயலானது நல்ல குடும்பத்துள் பிறந்தவனிடத்தே உள்ளதாம் என்பது பொழிப்பு.

(க.) வறிஞராம் ஆதுலர்களுக்கு இல்லையென்னாமல் ஈயும் இனிய குணமானது நல்ல குடும்பத்திற் பிறந்த நல்லோனிடத்துள்ளதாம் என்பது கருத்து.

(வி.) ஏதோர் பொருளுமில்லா ஏழைகளுக்கும், பிணியாளருக்கும் இனிய உதவியாம் பொருளை இல்லையென்னாமல் ஈயுங் குணம் நல்லக் குடும்பத்துள் பிறந்து வளர்ந்த நல்லோரிடத்தே உண்டாம் என்பது விரிவு.

4.இன்னா திரக்கப் படுத லிரந்தவ
னின்முகங் காணு மளவு.

(ப.) இன்னா - யாதொரு பொருளுமிராது, திரக்கப்படுத - இரஞ்சி கேட்கப்படுதலை, விரந்தவ - இரக்கப்படுவோனது, நின்முகங் - நேராய முகத்தை,