பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 681

காணும் - பார்க்குங்கால், மளவு - இல்லாநிலை விளங்கிப்போமென்பது பதம்.

(பொ.) யாதொரு பொருளும் இராது இரஞ்சி கேட்கப்படுதலை இரக்கப்படுவோனது நேராய முகத்தைப் பார்க்குங்கால் இல்லாநிலை விளங்கிப்போம் என்பது பொழிப்பு.

(க.) ஒன்றுமில்லையென்று இரக்கவந்தவனது முகக்குறிப்பால் ஏதுமில்லாமலே இரக்கவந்தான் என்பதை எளிதிலறிந்துக் கொள்ளலாம் என்பது கருத்து.

(வி.) ஏதுமில்லாது இரக்கவந்தவனது குறிப்பை அவனுக்குள்ள ஆயாசத்தாலும் முகச்சோர்வினாலும் இல்லாமலே இரக்கவந்தான் என்பதை எளிதில் உணர்ந்து ஈவதே ஈகை என்பது விரிவு.

5.ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

(ப.) ஆற்றுவா - ஆறுதலுள்ளோர், ராற்றல் - மற்றோரை யாறுதற்செய்தலி யாதெனில், பசியாற்ற - பசியாக்கினியை யாற்றலேயாம், லப்பசியை - அத்தகையப் பசியாக்கினியை, மாற்றுவா - அகற்ற வேண்டியவர்கள், ராற்றலிற்பின் - முன் ஆற்றிப் பின்பு தன் பசியை யாற்றிக்கொள்ள வேண்டுமென்பது பதம்.

(பொ.) ஆறதலுற்றுள்ளோர் மற்றோரை ஆறுதற்செய்தல் யாதெனில் பசியாக்கினியை ஆற்றலேயாம். அத்தகைப் பசியாக்கினியை அகற்ற வேண்டியவர்கள் முன்பு ஆற்றி பின்பு தன்பசியை ஆற்றிக்கொள்ள வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) காலப்புசிப்பைக் காலத்திலுண்டு ஆறுதலுற்றுள்ளவர்கள் மற்றோரை ஆறுதற்செய்வதியாதெனில் பசியுள்ளோரையறிந்து முன்பு அவர்கள் பசியை ஆற்றி பின்பு தங்கள் பசியைத் தணித்துக்கொள்ளவேண்டும் என்பது கருத்து.

(வி.) சகல சுகப்புசிப்புக்களையும் உண்டு ஆற்றலுற்றுள்ள கனவான்கள் மற்ற ஏனைய வரியர்களையும் ஆற்றலுறச் செய்வது யாதெனில் அவர்கள் முகங்கண்டு பசியை ஆற்றி பின்னர் தங்கள் பசியைத் தணித்துக்கொள்ளுவதே ஈகையின் ஏதுவாம் என்பது விரிவு.

6.அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

(ப.) அற்றா - ஏதுமில்லாதவருக்கு, ரழிபசி - மரணத்தைத் தரக்கூடிய பசியை, தீர்த்த - ஆற்றிய, லஃதொருவன் - அவ்வொருவன், பெற்றான் - அடைந்தான், பொருள் - மெய்ப்பொருள், வைப்புழி - நிலையை யென்பது பதம்.

(பொ.) ஏது மில்லாதவருக்கு மரணத்தைத் தரக்கூடிய பசியை ஆற்றிய அவ்வொருவன் அடைந்தான் மெய்ப்பொருள் நிலையை என்பது பொழிப்பு.

(க.) யாதுமற்ற ஏழைகளது மரணத்தைத் தரக்கூடிய பசியையாற்றிக் குளிரச்செய்த ஒருவன் தானடைய வேண்டிய மெய்ப்பொருள் நிலையைச் சார்ந்தான் என்பது கருத்து.

(வி.) உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் என்னும் முதுமொழிக்கிணங்க யாதுமற்ற ஏழைகளது பசியை மாற்றி உயிர் கொடுக்கக்கூடிய சீவகாருண்யமமைந்த ஒருவன் தோன்றுவானாயின் அவனது கருணைநிலையே மெய்பொருள் வைப்பாதலின் சீவர்களின் பசியை ஆற்றி ரட்சிப்போன் மெய்ப்பொருள் நிலையை அடைந்தானென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “ஒன்றாகநல்ல துயிரோம்ப லாங்கதன்பின், நன்றாய்தடக்கினார்க்கித்துண்டல் - என்றிரண்டுங், குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம், நின்றது வாயிற்றிறந்து” பொருளெனல் மெய்ப்பொருள் வைப்புழி விரிவு.

7.பாத்தூண் மரீ| யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.

(ப.) பாத்தூண் - பசித்தோர் முகம்பார்த் துணவை, மரீஇ - அளிக்கும், யவனை - ஒருவனை, பசியென்னும் - பசியாக்கினியாம், தீப்பிணி - கொடுநோய், தீண்டலரிது - அணுகாதென்பது பதம்.