பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பகவன் மகதநாட்டை விட்டு வடதிசைநாடி உத்திராபதியாங் காசியை அடைந்தவுடன் சில அரசர்கூடி பகவனுக்கோர் இருக்கைமடங்கட்டி வைத்த காலத்தில் அவருக்கு ஓர் நீண்ட சடையிருந்தது.

வீரசோழியம்

மிக்கவுத்திராபதிக்கு மேவினார் / தொக்க செஞ்சடைப்பரன்
றனக்கோர் தூசளித்தவாய் / மைக்கொள்சோலை சூழுநீதி
மன்னர்கூடி வாரணம் / புக்க வாசவர்க் கிருக்கை நல்கினார்.

சிலப்பதிகாரம்

வாடகமாடத் தறிதுயிலமர்ந்தோன் / சேடங் கொண்டு சிலர் நின்றேத்தத்
தெண்ணீர்சுரந்த செஞ்சடைக்கடவுள் / வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலி
முடி வளை யுடைத்தோன் முதல்வன்சென்னியின் / றிடி யுடை பெருமழை யெய்தியாங்கப்
பிழையாவளையுட் பெருவளஞ்சுரப்ப / மழைபிணித்தாண்ட மன்னவன் வாழ்கென.

அருங்கலை செப்பு

கங்கைநதிக்குங் கலைநிதிக்குங் காரணனா / யெங்கு நிலைத்தான் றன்.

புத்தபிரான் பிறந்ததும், வைகாசி பௌர்ணமி - அரசை துறந்ததும், மாசி பௌர்ணமி - நிருவாணமுற்றதும், பங்குனி பௌர்ணமி - பரிநிருவாணமுற்றதும், மார்கழி பௌர்ணமி யாதலின் அப்பவுர்ணமி காலத்தையும் அவர் சடா பாரத்திற் தோன்றிய தெண்ணீர் விசேஷத்தையுங் கருதி விவேகமிகுத்த மேலோர் கங்கைக் கரைக்குச் சென்று சங்கத்திற் சேர்ந்து தவம்புரிந்து வந்தார்கள்.

வீரசோழியம்

அம்பொற் பணைமுகத்துத் தீண்கோட் டணிநாகம் / வம்புற்றவோடை மலர்ந்திலங்க - உம்பர்
நவம்புரியு நாண்மதியுங் கங்கையு நண்ணித் / தவம்புரிவார்க் கின் பந்தகும்.

சிலப்பதிகாரம்

போதித்தானம் புரிந்த றங் கொள்ளவு / மென்வாய்க் கேட்துடா ரிறந்தோருண்மெயி
னன்னீர் கங்கை யாடப்போந்தேன் / மன்னர் கோவே வாழ்க வீங்கென.

- 1:31; சனவரி 15, 1908 –

இவ்வகையாக அப்பாறையிற் பதிந்துள்ள பாதப்பதிவை கமலரேகைக் குறிப்புடன் சந்தனக்கூட்டிலும், அம்பர் கூட்டிலும் பதித்தெடுத்துவந்து வைத்துக்கொண்டு சங்கத்தோர் ஒவ்வொருவருந் தரிசித்து அவர் தருமத்தை சிந்தித்துவந்ததும் அன்றி நாளதுவரையில் பர்மா, சிலோன், தீபேத் முதலிய தேசங்களில் கமல பாதசேவை செய்துவருகின்றார்கள்.

இத்தகைய தருமராட்சியத்தில் சொற்ப துற்கருமச் செயலால் வேஷ பிராமணர்கள் தோன்றி தருமநீதிகளையும் ஒழுக்கங்களையுஞ் சீலங்களையுங் கெடுத்து பௌத்த மடத்தோர் செய்துவந்த இட்டியாகம், ஒமயாகம் முதலியவைகளுக்கு மாறுதலாக கௌயாகம், அசுவயாகம், மேஷயாகம் என்னும் ஆடுகளையும் மாடுகளையும் குதிரைகளையும் சுட்டுத்தின்றுக்கொண்டு கொலைபாதகத்தை விருத்தி செய்ததுமன்றி பௌத்த சங்கத்தோர் வேதவாக்கியங்களுக்கு மாறுதலாக தவளை வயிற்றிலும் கழுதை வயிற்றிலும் நாயின் வயிற்றிலும் மனிதர்கள் பிறந்து வேதங்களை எழுதினார்கள் என்றும் பௌத்தர்களால் நீருக்கும் மண்ணுக்கும் காற்றுக்கும் நெருப்புக்கும், ஆகாயத்திற்கும் கொடுத்திருந்த பெயர்களை உருக்கொண்ட தேவர்களாக வகுத்து அவர்களுக்குப் பெண்சாதி பிள்ளைகளையுஞ் சிருட்டித்து அத்தேவர்களுக்கும் மற்றக் குடிகளுக்கும் மத்தியில் வேஷபிராமணர்களிருந்து பூசை நெய்வேத்தியங்கள் நடத்துகிறவர்கள் என்றும் பொய்யிற்குப் பொய்யை முட்டுக்கொடுத்து பொய்யையும் விருத்தி செய்துக்கொண்டு கைம்பெண்களைப் புணரும் புண்டரீக யாகம் என்னும் காமத்தையும் விருத்தி செய்து வருங்கால் பௌத்த தருமக்கேழ்வியிலிருந்த குடிகள் புத்தர் என்றும் அழகர் என்றும், அரங்கர் என்றும், தருமர் என்றும் வழங்கிய பகவனைப் பற்றி விசாரிக்கும் காரணம் கொண்டு புத்தரே விஷ்ணு என்றும், விஷ்ணுவே புத்த அவதாரம் என்றும் புராணமேற்படுத்தி புத்தாபாதமே விஷ்ணுபாதம் விஷ்ணுபாதமே புத்தாபாதம் என்றும் கூறி அக்கமலபாதத்தை நாம் நெற்றியிலணைந்துக்கொண்டு