பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/721

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 711

கொல்லி - கெடுப்பதுடன்,யினமென்னு - துறவினனுக்குரவி னராகும், மேமப்புணையை - சாதுசங்கத்தையும், சுடும் - தகிக்குமென்பதுபதம்.

(பொ.) கோபமானது தன்னை அடுத்தோரைக் கெடுப்பதுடன் துறவினனுக்கு உரவினராகும் சாதுசங்கத்தையும் தகிக்கும் என்பது பொழிப்பு.

(க.) துறவியானவன் தனதுள்ளத்தில் வெகுளியைப் பதித்திருப் பானாயின் தன்னைக் சேர்ந்தோர் கெடுவதுடன் தனக்குயினமாக விளங்கும் சங்கத்து சிரமணர்களையுஞ் சுடும் என்பது கருத்து.

(வி.) துறவியானவன் சாந்தத்தை நிறப்பற்குச் சங்கஞ்சேர்ந்து தனது கோபத்தை யடைக்காமற் போவானாயின் அக்கோபத்தால் தன்னையடுத்தோர் கெடுவதுடன் சேர்ந்துள்ள சங்கத்தில் கூடிவாழ்கும் சமணமுநிவர் களையும் அஃதுசுடும் ஆதலின் வெகுளியை வுள்ளத்திலெழவிடாமல் அவிக்க வேண்டும் என்பது விரிவு.

7.சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

(ப.) சினத்தை - கோபத்தை. பொருளென்று - ஒருபொருளென்று, கொண்டவன் - சேர்த்துள்ளவனுக்கு, கேடு - முடிவின் துக்கம் யாதெனில், நிலத்தறைந்தான்-மடிந்து மண்ணிற் புதைத்தலே, கைபிழையாதற்று - கைகண்ட தீவினையாக முடியு மேயன்றி வேறில்லை என்பது பதம்.

(பொ.) கோபத்தை ஒருபொருளென்று சேர்த்துள்ள துறவிக்கு முடிவின் துக்கம் யாதெனில் மடிந்து மண்ணிற்புதைப் படுதலே கைகண்ட தீவினையாக முடியுமே அன்றி வேறில்லை என்பது பொழிப்பு.

(க.) துறவியானவன் கோபத்தை ஓர் பொருளாகக் கொண்டு அதனை நிலைக்கச் செய்துக் கொள்ளுவானாயின் முடிவில் அவனடையும் துன்பம் யாதெனில் மடிந்து மண்ணில் மறைவதே யன்றி வேறு சுகம் என்றும் அடையமாட்டான் என்பது கருத்து.

(வி.) மெய்ப்பொருளை நாடிதுறவு பூண்டு சங்கஞ் சேர்ந்தவன் அதற்கு எதிரடையாயக் கோபத்தை ஓர் பொருளாக எண்ணி சேர்த்துக் கொள்ளுவானாயின் அதுவே அவன் மெய்ப் பொருளை மறைத்து மரணாவத்தையைக் கொடுத்து மண்ணில் மறைக்கச் செய்யும் என்பது விரிவு.

8.இணரெரி தோய் வன்னவின்னா செயினும்
புணரின் வெகுளாமெ நன்று.

(ப.) இணரெரி தோய் - நெருக்க முற்றோர் சகிக்க வொண்ணாத, வன்ன வின்னா - கொடியதுன்பத்தைச் செய்யினும், புணரின் - துறவிசார்ந்தவரிடம், வெகுளாமெ - உள்ளத்தினும் உடலினுங் கோபக் கிளர்ச்சியை எழவிடாததே, நன்று - நல்லதாகும் என்பதுபதம்.

(பொ.) நெருக்க முற்றோர் சகிக்க வொண்ணாத கொடியதுன்பத்தைச் செய்யினும் துறவி சார்ந்தவரிடம் உள்ளத்தினும் உடலினுங் கோபக் கிளர்ச்சியை எழ விடாததே நல்லதாகும் என்பது பொழிப்பு.

(க.) துறவிக்கு அன்னியரால் சகிக்க முடியாத துன்பம் நேரினும் சங்கத்தோர் முன்னிலையில் தனது கோபக் கிளர்ச்சியை எழவிடாமல் தடுப்பதே சுகநிலை என்பது கருத்து.

(வி.) சங்கஞ்சேர்ந்து சிரமணம் பெற்றோன் அன்னியரால் உண்டாந்துன்பத்தைச் சகித்து, சேர்ந்த சிரமணர் முன் தனது வெகுளியை அடக்கி காத்தலே நல்லதாகும். அவர்கள் முன்னிலையில் சினத்தைக் காக்கா விடின் போதனை சரிவாராது என்பதே விரிவு.

9.உள்ளிய வெல்லா முடநெய்து முள்ளத்தா
லுள்ளான் வெகுளி யெனின்.

(ப.) முள்ளத்தா - துறவிதன் னுள்ளத்தில், வெகுளி - கோபத்தை, லுள்ளான் அடக்கியுள்ளான், யெனின் - என்பதாயின், உள்ளிய - தானெண்ணிய,