பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

714 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) உலக இன்பத்தில் ஆசையற்றவனாயிருப்பானாயின் களங்கமற்றோன் என்பார்கள் அதனுடன் நான்கு வாய்மெகளையும் உணர்வானாயின் தூய உடம்பினனே யாவன் என்பது கருத்து.

(வி.) சகல களங்கங்களாம் மனமாசுகளற்று தூய உடம்பினனாக வேண்டிய துறவி ஆசையை அகற்றல் வேண்டும். அதற்கு உதவி வேண்டுமேல், நான்கு மெய்வாய் மொழிகளாம், பிறப்பின் துக்கம், பிணியின் துக்கம், மூப்பின் துக்கம், மரணதுக்கங்களைக் கண்டுணர்ந்த யிடத்தே வந்து தீருமென்பது விரிவு.

5.அற்றவ ரென்பார வாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற திலர்.

(ப.) அற்றவரென்பா - சகலவாசைகளையு மொழித்தோமென்று கூறும் படியானவர்கள், ரவாவற்றார் - ஆசைகளைப் பற்றறவொழித்துள்ள, மற்றை - வேறொருவரைப்போல், ரற்றாக - பூர்த்தியாக, வற்றதிலர் - ஒழித்தவர்களாகா ரென்பது பதம்.

(பொ.) சகல ஆசைகளையும் ஒழித்தோமென்று கூறும்படியானவர்கள் ஆசைகளைப்பற்றற ஒழித்துள்ள வேறொருவரைப்போல் பூர்த்தியாக ஒழித்தவர்கள் ஆகார் என்பது பொழிப்பு.

(க.) சகல ஆசைகளையும் ஒழித்துவிட்டேன் என்று எத்துறவி வெளியிற்கூறித் திரிகின்றானோ அவன் முற்றும் ஒழித்த முநிவர்கள் போலாகாது சிற்சில அவா உடையவனே என்பது கருத்து.

(வி.) உலகமக்களுள் யாவனொருவன் தன்னை முற்றுந் தெரிந்தவன், முற்றுந்தெரிந்தவன் எனச் சொல்லித் திரிகின்றானோ அவனை விவேகிகள் சற்றுந் தெரியாதவன் என்று எண்ணிக் கொள்வது போல ஓர் துறவி, நான் சகல ஆசைகளையும் ஓழித்தேன் என சொல்லித் திரிவானாயின், சகல ஆசைகளையும் ஒழித்து முநிந்துள்ள முனிவர்கள் அவனை சிற்சில ஆசை அறாதவன் என்றே மதிப்பார்கள் என்பது விரிவு.

6.அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா.

(ப.) யொருவனை - யாதா மொருவனை, வஞ்சிப்பதோரு - குடிகெடுக்க முயல்வதே, மவா - ஆசையின் மூலமென்னப்படும், அஞ்சுவதோரு - அவற்றிற்கு பயந்து நடத்தலே, மறனே - புத்தரது தன்மமா மென்பது பதம்.

(பொ.) யாதாமொருவனைக் கெடுக்க முயல்வதே ஆசையின் மூலமென்னப்படும் அவற்றிற்கு பயந்து நடத்தலே புத்தரது தன்மமாம் என்பது பொழிப்பு.

(க.) தீவினையாம் வஞ்சினைச்செயலுக்கு பயந்து அவாவை அறுத்தலே புத்த தன்மமென்றும் ஒருவனை வஞ்சித்துக் குடிகெடுத்தலே அவாவின் அதர்மமாம் என்பது கருத்து.

(வி.) ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பதாகியத் தொழில்கள் யாவும் ஆசையின் பெருக்கத்தால் உண்டாஞ் செயல்கள் என்னப்படும் வஞ்சினத்திற்கும் சூதிற்கும் பயந்து நடத்தலே தீவினைகளை அகற்றும் புத்ததன்மமே என்பதற்குச் சார்பாய் சீவகசிந்தாமணி "கொடுவெஞ் சிலைவாய்க் கணையிற் கொடிதாய், நடுநாளிரவின்னவை தான் மிகுமா, னெடுவெண்ணில வின்னிமிர் தேர்பரியா, தடுமால்வழி நின்றறனேயருளாய்” என்றும் பாட்டியல் “தீவினையை வெல்லும் அறவாழி தெய்வமஞ்சல்” என்பது கொண்டு வஞ்சினப்பெருக்கமே ஆசையின் பீடமென்றும் அவற்றிற்கு பயந்து அவாவை அறுத்தலே புத்த தன்மம் என்றும் கூறிய விரிவு.

7.அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

(ப.) அவாவினை - ஆசையை யொழித்து, யாற்ற - ஆறுதலுற்றவனுக்கு, வறுப்பிற் - பிறவியின் பின்னலறுந்து போம், றவாவினை - ஆசையினை,