பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/728

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

718 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கெய்தலால் - வந்து கூடுவதால், செய்தவ - நல்லூக்கத்தில், மீண்டு - இடைவிடாது முயலப்படும் - முநிந்து சாதித்தல் வேண்டுமென்பது பதம்.

(பொ.) துறவிகோறிய தவத்தால் தாங்கோறியவைகள் வந்து கூடுவதால் செய்யும் நல்லூக்கத்தை இடைவிடாது முநிந்து சாதித்தல்வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) துறவியானவன் நாடிநிற்குந் தபோபலத்தால் அவன் கோறியவைகள் முடிவது அநுபவமாதலின் மீண்டுந் தவச்செயலில் முநிந்தே நிற்கவேண்டும் என்பது கருத்து.

(வி.) இல்லந்துறந்து சங்கஞ்சேர்ந்த சிரமணன் தனது இடைவிடா தவச் செயலால் வேண்டியவைக் கைகூடுதல் அனுபவமுங் காட்சியுமாதலின் துறந்தோன் தவச் செயலில் மீண்டும் முயன்று சாதித்து சித்தி பெறவேண்டும் என்பது விரிவு.

6.தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லா
ரவஞ் செய்வாராசையுட் பட்டு.

(ப.) தவஞ்செய்வார் - நல்லூக்கத்தில் முநிந்து நிற்போர், தங்கருமஞ் செய்வார் - தாங்களடைய வேண்டிய வீடுபேறாம் சுகநிலையந்தேடிக் கொள்ளுவர், மற்றல்லா - அவ்வகை முனியாதோர், ராசையுட்பட்டு - பேராசையிற் சிக்குண்டு, ரவஞ்செய்வார் - தங்களுக்குத்தாங்களே கேட்டையுண்டு செய்துக் கொள்ளுவார் என்பது பதம்.

(பொ.) நல்லூக்கத்தில் முநிந்து நிற்போர் தாங்களடைய வேண்டிய வீடுபேறாம் சுகநிலையந் தேடிக்கொள்ளுவர், அவ்வகை முநியாதோர் பேராசையிற் சிக்குண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டை உண்டு செய்துக்கொள்ளுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) தன்னை அடைக்கியாளுந் தவநிலையில் ஊக்கம் பெற்றிருப்போர் தானே தானே சுயம்பாம் சுகநிலையைப் பெறுவார்கள் அவ்வகையில்லாதோர் துக்கநிலையடைவார்கள் என்பது கருத்து.

(வி.) இரசோகுணம், தமோகுணம் இரண்டு மற்று சத்துவ குணம் நிறம்பத் தவத்திற்கு முநிந்த துறவி இடைவிடாசத்துவ சாதனத்தில் முநிந்து நிற்பானாயின் சதா சுகநிலையைப் பெறுவான். அங்ஙனமில்லாது பேராசையுற்று உழல்வோன் மீளாதுக்க நிலையிற் சுழல்வான் என்பது விரிவு.

7.சுடச்சுடப் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு.

(ப.) துன்பஞ் - துக்கவிருத்தியின் காரணங்களை, சுடச்சுட - உடனுக்குடன் நோக்கிற் பவர்க்கு - உய்த்துணறுவோருக்கு, சுடச்சுட - புடமிடப்புடமிட, பொன் போலொளி - பொன்னானது பிரகாசிப்பது போல, விடுந் - சாந்தம் ஒளிவிடுமென்பது பதம்.

(பொ.) துக்கவிருத்தியின் காரணங்களை உடனுக்குடன் உய்த்துணறுவோருக்கு புடமிடப்புடமிடப் பொன்னானது பிரகாசிப்பது போல சாந்தம் ஒளிவிடும் என்பது பொழிப்பு.

(க.) பொன்னைப் புடமிடப்புடமிட ஒளிவீசுவது போல் துக்கம் எதனால் உண்டாயின என்று உடனுக்குடன் உசாவி உணர்வானாயின் துக்கந்தோற்றும் நிலையகன்று சுகவொளிபெறுவான் என்பது கருத்து.

(வி.) பொன்னினை எடுத்துச் சுடசுடப் புடமிடுவதாயின் உள்ளக்களங்கமற்று மேலும் மேலும் பிரகாசிப்பதுபோல் துறவி தனது தவமுயற்சியால் துக்கம், துக்க உபத்திரவம் துக்கபோற்பவ காரணம், துக்க நிவாரணமாகும் வழிவகைகளை உடனுக்குடன் உய்த்துணர்ந்து துக்கோற்பவக் காரணத்தை அகற்றுவனாயின் சுகவொளியானது தன்னிற்றானே விளங்கும் என்பது விரிவு.