பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 63

விஷ்ணுவை சிந்திக்கவேண்டும் என்றும் இராமானுஜாசாரியாரால் வகுத்து இருபாதங்களுக்கு மத்தியில் அம்மன் தீபசோதியை மஞ்சள் தூளிதத்தாலேனுங் சிவப்பு தூளிதத்தாலேனும் அணைந்துக் கொள்ளவேண்டும் என்றும் ஆக்கியாபித்தாராம். இதன் ஆதாரத்தை மேல்கோட்டை செல்வராயர், ஆலய அர்ச்சகர், பட்டாசாரியார் அவர்களால் இயற்றியுள்ள ஆண்டாள் ஸ்ரீசூரணம் என்னும் நூலின் முகப்பில் வாலக்கும்மிப் பாடலைச் சுட்டி கமலபாதம் இரண்டிற்கு மத்தியில் சோதியை வளர்த்துங்கோளென்று கூறியிருக்கின்றார்.

வாலக்கும்மி

உச்சுக்குநேறே உண்ணாவுக்குமேல் நிதம் / வைத்தவிளக்கு யெறியுதடி
அச்சுள்ளவிளக்கே வாலையடி / அவியாம லெரியுது ஞானப்பெண்ணே.

இத்தகைய தீபசின்னத்தை ஸ்ரீசூரணமென்றும் திருமண்காப்பென்றும் வகுத்து அதை நெற்றியில் அணைந்துக்கொண்டுவரும் ஒரு கூட்டத்தார் தோன்றி, புத்தர் சங்கமே விஷ்ணு சங்கம் என்றும் விஷ்ணு சங்கமே புத்தர் சங்கம் என்றும் புத்த தருமச்சக்கரமே விஷ்ணுசக்கரம் என்றும் விஷ்ணு சக்கிரமே புத்தசக்கரம் என்றும் கூறிவந்த விஷயத்தால், நாளுக்குநாள் புத்ததருமங்கள் யாவும் மாறுபட்டு அபுத்ததன்மங்கள் மேலிட்டு தன்மச்சக்கரத்தைக் கொலைச்சக்கரமாகவும் சாது சங்கத்தை யாதுசெயலும் அற்ற சங்கமாகவும் மாற்றிவிட்டார்கள்.

மணிமேகலை

சாதுயர்நீக்கிய தலைவன் தவமுனி / சங்க தருமன் றானெமக்கருளிய
அறக்கதிராழி திறப்பட வுருட்டிய / காமற் கடந்த வாமன் பாதம்.

வீரசோழியம்


அருளாழி நயந்தோய் நீ / யறவாழி பயந்தோய் நீ
மருளாழி துறந்தோய் நீ / மறையாழி புரிந்தோய் நீ

விஷ்ணுவிற்கும், புத்தருக்கும் அவதாரங்கள் உண்டு என்று புராணங்கள் ஏற்பட்டதுமன்றி கீதகோவிந்தத்தில் வேதாநுத்தரதே என்றும், ஸ்ரீ ஜெயதேவரால் காருண்ய மாதந்வதே என்றும் கூறியுள்ள ஆதாரங்களால் புத்த தன்ம சரித்திர ஆதாரங்களைக் கொண்டே வைணவசமயம் தோன்றியதுமன்றி புத்தபிரான் மாசிமாத பௌர்ணமியில், ஓடேந்தி பிச்சையேற்ற பாவனையாய் வைணவர்கள் கோவில்களில் பிரம்ம உச்சவம் என்றும் கொண்டாடி வைணவர் கடவுள் கையில் வெள்ளிபோல் கொடுத்து பிச்சை ஏற்று ஐதீகங் காட்டுகின்றார்கள்.

அதுவும் அன்றி புத்தபிரானுக்குரிய முப்பத்திரண்டு முத்திரைகளில் முக்கியவற்றில் சிலதை வைணவர் தங்கள் தேவதைகள் கையிலும் உருவத்திலும் நாட்டியிருக்கின்றார்கள்.

ஆதலின் நமது பௌத்ததன்ம சோதிரர்கள் ஒவ்வொருவரும் ஸ்ரீபாதத்தையேனும் அவர்கள் மாறுதலையேனும் புறக்கணிக்காது மெய்யறம் என்னும் புத்ததன்மத்தையூட்டி சாதிபேத சமய பேதங்களை ஒட்டி சகோதிர ஐக்கியத்தை நாட்டி சஞ்சலத்தை வாட்டி சலனம் அற்ற நிருவாணதிசை அடையும் சங்கத்தையும் தன்மச்சக்கரத்தையும் பின்பற்றலே சத்தியதன்மம் எனப்படும். இத்தகைய நன்மெய்க் கடைபிடித்த இதயத்தையே பதுமநிதி - தன்மநிதி - சங்கநிதி வாய்த்தக் குபேர பட்டிணம் என்று வகுத்துவைத்தார்கள்.

பௌத்த தரும் அரசர்களுக்குள் பூரணவாசி - அஷ்டமி - அமரவாசி முதலிய திதிகளை விசேஷ விரதங்களாகக் கொண்டாடி வந்தவைகளில் அரசர்கள் அநுசரித்துவந்த அஷ்டமிக்கு கோ, குல, அஷ்டமி என்றும் மன்னு பூரணை என்றும் அரச அமரமென்றும், வழங்கி வந்தார்கள்.

அருங்கலைச்செப்பு

அரயர்களேற்கு மட்டமிபூரணை / விரதவ மர முன்னாள்.

பௌத்தர்கள் கியான பஞ்சசீலங்கள் பஞ்ச சமஸ்காரங்கள் என்றும் தாங்கள் எதேஷ்டமாகப் புசிக்கத்தக்க பஞ்சாமிர்தங்கள் என்றும், அஷ்டசீலங்கள் அஷ்டாட்சரம் என்றும், தசசீலங்கள் தசமிதானம் என்றும் தசாவதாரங்கள் என்றும் மாறுபட்டிருக்கின்றது.