பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/730

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

720 / அயோத்திதாசர் சிந்தனைகள்


39. அருளுடைமெய்.

அருளுடைமெய் என்பது கிருபை நிறைந்தோன் என்னும் பொருளைத்தரும். அதாவது அன்பின் நோக்கும், மிருதுவாயவாக்கும், கிருபையே ஆக்கலாய் சேர்க்குமுடலுக்கு அருளுடைமெயோர் என்றும், தனச்செல்வம், தானியச்செல்வம், மனைச்செல்வம், மக்கட் செல்வ முடையோரைப் பொருளுடைமெயோர் என்றுங் கூறப்படும். அத்தகைய பொருளோ மிலேச்சர்களாகிய ஆரியர்களிடத்திலுமுண்டு. அருளோ அவ்வகைத்தன்று சாந்தம் அன்பு யீகைஎவ்வுடலிற் சேருகின்றதோ அவனையே அருளுடைமெயோன் என்றுக் கூறப்படுதலால் துறவி அதனை நன்காராய்ந்தொழுகும் வகைகளை விளக்குகின்றார்.

1.அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வ
மாரியார் கண்ணு முள.

(ப.) அருட்செல்வஞ் - கிருபையை நிறப்புஞ்சீரே, செல்வத்துட் செல்வம் - சீரினுஞ் சீரென்னப்படும், பொருட்செல்வ - தனதானியச்சீரோ, மாரியார் கண்ணுமுள் - மிலேச்சரிடத்து முண்டுயென்பது பதம்.

(பொ.) கிருபையை நிறப்புஞ் சீரே சீரினுஞ் சீரென்னப்படும் - தனதானியச் சீரோ மிலேச்சரிடத்தும் உண்டு என்பது பொழிப்பு.

(க.) மேன்மக்கள் சேர்த்துள்ளக் கிருபை யென்னும் அழியாச் செல்வமே சிறந்த செல்வமென்னப்படும் மற்றும் அழியும் தனதானியச் செல்வமோ மிலேச்சராம் கீழ்மக்களிடத்தும் உண்டு என்பது கருத்து.

(வி.) முற்றுந் துறந்து சங்கஞ்சேர்ந்த துறவிகள் பொருட் செல்வத்தை சேர்க்காது அருட்செல்வமாம் கிருபையின் நிறைவே அடைய வேண்டியவர்களாதலின் பொருட்செல்வம் கீழ்மக்களாம் ஆரியரிடத்தும் உண்டு, அதனால் மேன்மகனாம் விவேகமிகுக்குந்துறவி அருள்செல்வத்தையே சேர்க்கும் வழிவகைகளை விளக்கலானார்.

இவற்றுள் இத்திரிக்குறள் மூலத்தையும், நாலடி நாநூறையும் ஜர்ஜ் ஆரங்டியன் துரை பட்ளர் கந்தப்பன் என்பவரால் கொண்டுபோய், தமிழ்ச்சங்கத்து அதிபதி மேம்பட்ட எலீஸ் துரையவர்களிடம் ஏட்டுப்பிரிதியாகக் கொடுத்து அச்சிட்டு வெளிவந்தபோது ஒலைப்பிரிதிக்கு மாறுதலாக சாற்றுக்கவிகளில் சிலது அதிகரித்தும் அறத்துப்பாலிலுள்ள சில செய்யுட்களைப் பொருட்பாலிற் சேர்த்தும், இச்செய்யுளில் ஆரியாரென்று வந்த மொழியைப் பூரியாரென்றும் மற்றும் செய்யுட்களை மாற்றியுள்ளதை கந்தப்பனவர்கள் சங்கத்திற்கு எழுதி கேட்டபோது மறுமொழி கிடைக்காமல் போய்விட்டது என்பது விவேகிகளறிந்த விடயங்களேயாம் அம்மொழி சங்கை யவ்வகையாயினும் முன்கலை திவாகரத்தில், “மிலேச்சராரிய” ரென்றே குறிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குக் சார்பாய், பாகுபலி நாயனார் பின்கலை நிகண்டு ஏட்டுப்பிரிதியிலும், மார்க்கலிங்க பண்டாரம் பின்கலை நிகண்டு ஏட்டுப்பிரிதியிலும், “ஆரியர் மிலேச்சர்கிழோரென்றும்” "மன்னுமாரியருங் கீழோரென்றும்," வரைந்துள்ள மொழிகளைத் தற்காலம் அச்சிட்டுள்ளவர்கள் “ஆரியர் மிலேச்சர் நல்லோரென்றும்” "மன்னும் பூரியருங் கீழோரென்றும்" மாறுபடுத்தியுள்ளார்கள். இதுகொண்டே அம்மொழியும் மாறுபட்டுள்ளன என்பதற்கு ஐயமிறாவாம் ஆரியர் மிலேச்சரென்போரையே கீழ்மக்களென்பதற்குக் காரணம் யாதெனின்,

சூளாமணி

தேசமிலைச்சரிற் சேர்வுடையாரவர்
மாசின்மனிதர் வடிவினராயினுங்
சின்மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர்
நீசரவரையு நீரினிழிப்பாம்.

வஞ்சினம், பொறாமெய், குடிகெடுப்பு, கரவடம் கொடுஞ்செயலுடையக் கீழ்மக்களை மிலேச்சரென்றும், ஆரியரென்றும், நீசரென்றும் பௌத்தர்களால் வழங்கிவந்த மொழிகளைக்கொண்டு தனச்செல்வம், தானியச்செல்வமென்னும்