பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/733

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 723

அன்பு நிறைவில்லாதாயின் வான ராட்சியமாம் புத்தேளுலக சுகமில்லை என்பது கருத்து.

(வி.) உலகமக்களுக்கு தனச்செல்வம், தானியச்செல்வம், மனைச்செல்வம், மக்கட் செல்வமில்லாதபோது யாது சுகமில்லையோ அது போல் அன்பின் பெருக்கம் ஈகையின் பெருக்கம், சாந்தப் பெருக்கமாம் கிருபையின் நிறைவில்லாவிடின் பிறவி யற்றோர் வாழும் நித்திய சுகமாம் புத்தேளுலகம் இல்லை என்பது விரிவு.

8.பொருளற்றார் பூப்ப ரொருகால ருளற்றா
ரற்றார் மற்றாத லரிது.

(ப.) பொருளற்றார் - தனப்பொருள், தானியப்பொருளில்லாதோர், ரொருகா - மற்றொரு காலத்தில், பூப்ப - பொருள் சேர்ந்து முகமலர்வார்கள், லருளற்ற - கிருபையென்பதில்லா துறவிகள், ரற்றார் - உள்ள சுகமுமற்று, மற்றாதலரிது - மற்றுந்தாங் கோறிசென்ற முக்திசுகமுங்கிடையாமற் போவார் என்பது பதம்.

(பொ.) தனப்பொருள், தானியப் பொருள் இல்லாதோர் மற்றொரு காலத்தில் பொருள் சேர்ந்து முகமலர்வார், கிருபை என்பதில்லா துறவிகள் உள்ள சுகமுமற்று மற்றுந்தான் கோறிசென்ற முக்திசுகமுங்கிடையாமற் போவார் என்பது பொழிப்பு.

(க.) இல்லற மக்கள் தனப்பொருள், தானியப்பொருளற்று யாதொரு சுகமற்றிருப்பினும் மற்றொருகால் பொருள் சேர்ந்து முகமலர்ச்சியடைவார்கள், துறவியோதான் நிறப்பவேண்டியக்கிருபையை நிறப்பாமற் போவானாயின் உள்ள சுகமுங்கெட்டுத்தான் கோறிதுறந்த துறவின் சுகமுங் கிடையாமற் போவான் என்பது கருத்து.

(வி.) உலகமக்கள் தனச்செல்வம் தானியச்செல்வம் மனைச்செல்வம் மக்கட்செல்வமாகியப் பொருட்களற்று முகசோர்வுற்றிருப்பவர்கள் ஓர் கால்பொருட்கள் சேர்ந்து முகமலர்ச்சியுறினும் உறுவர், துறவிகளோ தாங்கள் கோறிச்சென்ற கிருபையை நிறப்பாது போவார்களாயின் உள்ள சுகமுங் கெட்டு கோறிய சுகமுமற்றே போவார்கள் என்பது விரிவு.

9.தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற்றேரி
னருளாதான் செய்யு மறம்.

(ப.) தெருளாதான் - அறிவின் தெளிவில்லா துறவி, மெய்ப்பொருள் - உண்மெய்ப் பொருளை கண்டற்றாற் - கண்டு தெளிந்தவன் போல், றேரி - காட்டிக்கொள்ளுதல், னருளாதான் - கிருபையில்லான், செய்யுமறம் - தருமஞ் செய்கின்றானென்று சொல்லுவதற் கொக்குமென்பது பதம். -

(பொ.) அறிவின் தெளிவில்லா துறவி உண்மெய்ப் பொருளைக் கண்டு தெளிந்தவன் போல் காட்டிக்கொள்ளுதல் கிருபையில்லாதான் தருமஞ் செய்கின்றான் என்று சொல்லுவதற்கு ஒக்கும் என்பது பொழிப்பு.

(க.) விவேகம் முதிரா துறவி தன்னைத் தானறிந்து கொண்டேனென நடித்தல் அருளில்லா ஒருவன் தருமத்தைச் செய்கின்றான் என்பது போலாம் என்பது கருத்து.

(வி.) மெய், வாய், கண், மூக்கு, செவி, என்னும் ஐம்பொறியின் வழியாயுண்டாம் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், என்னும் ஐம்புல நுகர்ச்சியைக் கண்டடையாது தன்னை அறிந்தவன் போல் நடித்து தென்புலத்தோன் எனக் கூறித்திரியும் துறவி யாவருக்கு ஒப்பானவனென்னில் கிருபை என்பதே கனவிலும் இல்லாலோபி தருமஞ்செய்கின்றானென்று கூறுவதுபோலாம் என்பது விரிவு.

10.வலியார் முற்றன்னை நினைக்கத்தான் றன்னின்
மெலியார் மேற்சொல்லு மிடத்து

(ப.) வலியார்முற் - விவேகமிகுத்தத் துறவிகள் முன்னிலையில், றன்னை - விவேகமற்ற துறவி தன்னையும், நினைக்க - ஓர் விவேகியென்று நடித்தல்,