பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/738

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

728 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) துறவியானவன் தன் மனதிலெழூஉம் அவாவின் பற்றுகள் எது யெதுவென்றாய்ந்து அவைகளை அகற்றுவானாயின் அவைகள் ஒழிவதுடன் அவைகளால் உண்டாம் நான்குவகைத் துக்கங்களுமிடம்பெறாமற் போம் என்பது கருத்து.

(வி.) கண்ணினால் பார்க்கும் பற்றும், மூக்கினால் முகரும் பற்றும், நாவினால் உருசிக்கும் பற்றும், செவியினால் கேட்கும் பற்றும், உடலால் ஊறும் பற்றுமாகிய ஐவகைப்பற்றுக்களில் எவை மிகுந்துள்ளன என்றுணர்ந்து அவைகளை அகற்றுவானாயின் அவைகள் தானே ஒழிவதுடன் மீளாதுக்கதிலாழ்ந்திவரும் பிறப்புப்பிணி மூப்புச் சாக்காடென்னும் நான்குவகை நோய்களும் இடம் பெறாமல் அகன்றுப்போம் என்பது விரிவு.

10.காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்.

(ப.) காமம் - துறவி தன் அவாவாலெழுமின்பம், வெகுளி - கோபம், மயக்கம் - அஞ்ஞானவிருள், மிவை மூன்ற - இம்மூன்றினது, னாமங் கெட - பெயர்களுங்கெட்டொழிய சாதிப்பானயின், கெடுநோய் - நான்குவகைத் துக்கங்களு மொழிந்துபோமென்பது பதம்.

(பொ.) துறவி தன்னவாவால் எழும் இன்பம் கோபம் அஞ்ஞான இருள் இம்மூன்றினது பெயர்களுங் கெட்டொழிய சாதிப்பானாயின் நான்குவகைத் துக்கங்களு மொழிந்துபோம் என்பது பொழிப்பு.

(க.) இன்பத்தால் எழூஉங் காமாக்கினியும் பற்றினால் எழூஉங் கோபாக்கினியும் உணவின் மயக்கத்தால் எழூஉம் பசியாக்கினியும் ஆகிய மூன்றும் அவிய சாதிப்பானாயின் அவை மூன்றும் அவிந்து ஒழிவதுடன் நான்குவகை துக்க நோய்களும் அகன்றுப்போம் என்பது கருத்து.

(வி.) துறவியானவன் பிறப்பின் துக்கம், பிணியின் துக்கம், மூப்பின் துக்கம் மரண துக்கம், நான்குவகைத் துக்க நோய்களைப் போக்கிக் கொள்ளுவதற்கே இல்லந் துறந்தவனாகலின் தனக்குள்ளெழூஉம் காமாக்கினி கோபாக்கினி பசியாக்கினியாகிய மூன்றும் அவியவும் சாந்தம் நிறம்பவும் சாதிப்பானாயின் உண்மெய்யில் நிலைத்து சதானந்த முற்று நிருவாண மடைவதுடன் என்றும் அழியா வீடு பேறாம் பரிநிருவாணமுற்று நட்சேத்திரம் பெற்று அகண்டத்து உலாவுவானென்பதற்குச் சார்பாய் வடநுலார், இராகத்து வேஷ மோகங்களற்றபோது சதானந்தமும் அம்மூன்றும் அறாவிடத்து சதா துக்கமும் உண்டெனக் கூறியுள்ள மொழியே போதுஞ் சான்றாம் என்பது விரிவு.

இவ்வறத்துப்பாலுள் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பமாகிய மூன்றுப் புதைப்பொருளும் அடங்கியுள்ளதால் இல்லறத்தோர் முதல் துறவிகள் ஈராகவுள்ள சகல மக்களும் தங்கள் தங்களுக்கு உண்டாந் துக்கங்கள் அற்று சுகப்பேற்றையடைய இஃது போதிய போதமாக்கும். ஆதலின் ஒவ்வோர் விசாரணைப்புருஷரும் இதிலடங்கியுள்ள ஆதிபுத்தராங்கடவுள் வாழ்த்து முதல் மெய்யுணர்வுவரையில் தேறவாசித்து உணர்வரேல் பொய்யாய வேதாந்த மாய்கையை விட்டுத் தெளிந்து மெய்யாய வேத அந்தத்தில் நிலைத்து பிறப்புப்பிணி மூப்புச்சாக்காடென்னும் நான்கு வகை துக்கங்களையும் ஒழித்து உண்மெய்யில்லயித்து என்றும் அழியா நித்தியானந்த சுகத்தை அடைவார்கள் என்பது சத்தியம் சத்தியமேயாம்.

திருவள்ளுவ நாயன் - திருவடிகளே சரணம்
அறத்துப்பால் முற்றிற்று

பொருட்பால்

41. நாடு

இவ்விடங்கூறும் பொருட்பால் யாதெனில் முற்கூறியுள்ள உண்மெய்ப் பொருளல்லாது செல்வப்பொருள் கல்விப்பொருளையே குறிப்பதாகும் அதாவது ஓர் தேசமும் மக்களும் அரசனும் சுகம்பெற்று வாழ்கவேண்டுமாயின்