பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/739

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 729

நாட்டின் வளமாம் தானியப் பொருளே முதற்பொருளென்னப்படும் அதுகொண்டே நீருயரவரப் புயரும் வரப்புயர பயிருயரும், பயிருயர குடியுயரும் குடியுயர கோனுயரும் என்பது முதுமொழியாதலின் நாட்டின் வளப்பத்தையுஞ் செயலையும் உலக மூலப்பொருளாக விளக்கலானார்.

1.தள்ளாவிளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

(ப.) தள்ளாவிளையுளுந் - சோர்வில்லா உழைப்பாளிகளும், தக்காரும் - விவேகமிகுத்தோரும், தாழ்விலா-குறைவில்லா, செல் வரும் - தனமுள்ளோரும், சேர்வது - சேர்ந்து வாழ்வது, நாடு - வளநாடென்பது பதம்.

(பொ.) சோர்வில்லா உழைப்பாளிகளும் விவேகமிகுத்தோரும் குறைவில்லா தனவந்தரும் சேர்ந்து வாழ்வது வளநாடென்பது பொழிப்பு.

(க.) உழைப்பிற்கஞ்சா உழவாளிகளாம் வேளாளரும் அறிவுள்ளோரும் தனவந்தருங் கூடி வாழ்குமிடத்திற்கே நாடு என்பது கருத்து.

(வி.) பூமியைத் திருத்தி காடுபோக்குவதற்கு அஞ்சாமலும், வரப்புயர்த்தி நீர்கட்டிபுழுதியடையக் கலைக்கி நஞ்சையாக்குவதற்கஞ்சாமலும் உழுது பயிரிடும் வேளாளர்களும் காலங்களை அறிந்து இன்னின்ன தானியங்களை இவ்விவ்வகையாக விளைக்க வேண்டுமென்னும் மதியூட்டும் விவேகிகளும் உழவாளருக்கு தனமுதலுந் தானிய முதலும் உதவிவரும் முதலீவோர்களுஞ் சேர்ந்து வாழ்வதே நாடென்பது விரிவு.

2.பெரும்பொருளாற் பெட்டக்க தாகிய ருங்கேட்டா
லாற்ற விளைவது நாடு.

(ப.) பெரும்பொருளாற் - சிறந்த தனவுதவியால், பெட்டக்கதாகி - பூமியைப் பெட்டகம்போல் வரப்புயர்த்தி, யருங்கேட்டா - அதனை யழுகப் புழுக நஞ்சையாகக் கெடுத்து, லாற்றவிளைவது - தானியங்கள் சுகமாக வோங்கி வளர்வது, நாடு - வளநாடென்பது பதம்.

(பொ.) சிறந்த தனவுதவியால் பூமியைப் பெட்டகம்போல் வரப்புயர்த்தி அதனை அழுகப்புழுக நஞ்சையாகக் கெடுத்து தானியங்கள் சுகமாக ஓங்கி வளர்வது வளநாடென்பது பொழிப்பு.

(க.) தனவுதவியால் பூமியைப் பெட்டகம்போன்ற வரப்புயர்த்தி, நீர்கட்டி, எருவிட்டு அழுகப்புழுக்கக் கலக்கி நஞ்சையாக்கிப் பல தானியங்களும் ஓங்கி வளர்ந்திருப்பதே நாடு என்பது கருத்து.

(வி.) தனவுதவிகொண்டும், தானியவுதவிகொண்டும் பூமியைத் திருத்தி, சுற்றிலும் பெட்டகம் போன்ற வரப்புயர்த்தி பிள்ளைகளை தெண்டித்து மதியூட்டல் அறக்கருணையென்றும், தெண்டித்துக் கொல்லுதல் மறக்கருணை யென்றும் வழங்குதல்போல் பெருங்கேடென்றும் அருங்கேடென்றும் இரு வகையுண்டு அவற்றுள் பெருங்கேடாயது சகலவற்றையுந் துன்புறுத்தி அழித்து விடுதல், அருங்கேடு என்பது துன்புறுத்தி பலனடையச் செய்தல். அதாவது பூமியைப் பழுதுபட வழுகக் கலைக்கி நஞ்சையாம் அருங்கேடடையச் செய்து நற்பலனாம் தானியங்களை ஓங்கி வளர்த்து சுகம் பெறுமிடமே நாடென்பது விரிவு.

இதனந்தரார்த்தங்கொண்டே பூமியைப் பலவகைக் கொத்திப்புழுதி யாக்கிப் பழுக வழுகக்கலைக்கித் துன்புறச் செய்யினும் அஃது மேலாய நற்பலனைத் தருவதே சுவாபமாதலின் அம்மண்ணிற்கு மறுபெயர் பிரமமென்றும், மநுக்களுள் ஒருவனைப் பல்லோர் பல்வகையாயக் கொடூரத் துன்பஞ் செய்யினும் அத்துன்பங்களைப் பொறுத்து அவர்களுக்குப் பிரிதி தீங்கு செய்யாது நற்பயனை அருளி உபகாரியாக விளங்குவோனை பிரமமென்றும் பௌத்த சாஸ்திரிகள் வரைந்துள்ளார்கள்.

3.பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு.

(ப.) பொறை - பூமியில் விளைப்பொருட்கட் யாவும், யொருங்கு - ஒன்றுசேர்ந்து, மேல்வருங்காற் - ஓங்கி வளர்ந்த காலத்தில், றாங்கி