பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/747

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 737


2.அஞ்சாமெ யீகை யறிவூக்க மிந்நான்கு
மெஞ்சாமெ வேந்தர்க் கியல்பு.

(ப.) அஞ்சாமெ - திடதேகமும், யீகை - தன்மசிந்தையும், யறிவு - விவேகமிகுதியும், வூக்க - விடாமுயற்சியும், மிந்நான்கு - ஆகிய வின்னான்கும், மெஞ்சாமெ - குறைவற விருப்பவனே, வேந்தற்கியல்பு - அரசரது செயலுக்குரியவனாவனென்பது பதம்.

(பொ.) திடதேகமும் தன்ம சிந்தையும் விவேக மிகுதியும் விடாமுயற்சியும் ஆகிய இன்னான்குங் குறைவற இருப்பவனே அரசர்களது செயலுக்குரியவனாவன் என்பது பொழிப்பு.

(க.) எதிரிகளுக்கு அஞ்சாதவனும் ஈகையை உடையவனும் அறிவுடையவனும், முயற்சியுள்ளவனுமாயிருப்பவனே அரசரது இயல்புடை யோன் என்னப்படுவான் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் தன்மசிந்தையை உடையவனும் எதிரி அரசர்களுக்கு அஞ்சாதவனும் விவேகத்தில் மிகுத்தவனும் எடுத்தச் செயலில் விடா முயற்சியுமாய நான்கும் இயல்பாகவே அமைந்துள்ளவனாயிருத்தல் வேண்டும் என்பது விரிவு.

3.தூங்காமெ கல்வி துணிவுடைமெ யீம்மூன்று
நீங்கா நிலனாள் பவர்க்கு.

(ப.) நிலனாள் பவர்க்கு - பூமியை யாளுமரசர்களுக்கு, தூங்காமெ - மயக்கமின்மெயும், கல்வி - கலைநூல் விருத்தியும், துணிவுடைமெ - யுத்த முநிவும், யிம்மூன்று - ஆகிய விம்மூன்றும், நீங்கா - அகலாதிருத்தல் வேண்டும் என்பது பதம்.

(பொ.) பூமியை ஆளும் அரசர்களுக்கு மயக்கம் இன்மெயும், கலைநூல் விருத்தியும் யுத்தமுநிவும் ஆகிய இம்மூன்றும் அகலாதிருத்தல் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) எக்காலும் சதாவிழிப்பிலும் கல்வியின் பெருக்கிலும் யுத்தத் துணியிலுங் கலங்காதிருப்பவனே அரசன் என்னப்படுவான் என்பது கருத்து.

(வி.) அரசனுக்கு தனது ஆளுகையில் விழிப்பும் கல்வி கற்றலின் மிகுப்பும் யுத்தத்திற்பின் முதுகொடா எதிர்ப்பும் ஆகிய இம்மூன்றும் அகலாதிருத்தல் வேண்டும் என்பது விரிவு.

4.அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.

(ப.) அறனிழுக்கா - தன்மநெறி பிறழாமல், தல்லவை - அதன்மவழிகள் யாவையும், நீக்கி - அகற்றி, மறனிழுக்கா - திடவீரங்குன்றாது, மானமுடைய - சகலருமதிக்கத்தக்க நிலைநிற்றலே, தரசு - மன்னு நிலை யென்னப்படு மென்பது பதம்.

(பொ.) தன்மநெறி பிறழாமல் அதன்மவழிகள் யாவையும் அகற்றி திடவீரங்குன்றாது சகலரும் மதிக்கத்தக்க நிலை நிற்றலே மன்னுநிலை என்பது பொழிப்பு.

(க.) அதன்மச் செயல்கள் யாவையும் நீக்கி அறநெறி மாறாமலும் வீரங்குன்றாமலும் சகலரும் மதிப்புற வாழ்தலே அரசர் நிலை என்பது கருத்து.

(வி.) அரசதன்மமாவது யாதெனில் தனக்குள் எழுங்காம, வெகுளி, மயக்கங்களை நீக்கி சத்திய சங்கங்களைப் போற்றலும், சமண முனிவர்களைக் காத்தலுங் குடிகளை நிலை நிறுத்தலும், சுத்த வீரங் குன்றாது சகலரும் போற்ற வீற்றிருத்தலுமேயாம் என்பது விரிவு.

5.இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

(ப.) இயற்றலு - தனதரசை செங்கோலாக்கலும், மீட்டலுங் - தனக்கப் புறப்பட்டுள்ள பூமிகளையும் மக்களையுஞ் சேர்த்தலும், காத்தலும் - அவைகள்