பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/748

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

738 / அயோத்திதாசர் சிந்தனைகள்

யாவையுஞ் சீர்பெற வாதரித்தலும், காத்த வகுத்தலும் - தனக்காதரவாய நால்வகை சேனைகளைப் பிறித்துவைத்தலுமாயதே, வல்ல - வல்லபமிகுத்த, தரசு - அரசென்னப்படு மென்பது பதம்.

(பொ.) தனதரசை செங்கோலாக்கலும் தனக்கப் புறப்பட்டுள்ள பூமிகளையும் மக்களையுஞ் சேர்த்தலும் அவைகள் யாவையுஞ் சீர்பெற ஆதரித்தலும் தனக்காதரவாய நால்வகை சேனைகளைப் பிறித்து வைத்தலுமாயதே வல்லபமிகுத்த அரசு என்னப்படுமென்பது பொழிப்பு.

(க.) அரசை செவ்விய வழியில் நடாத்தலும், சிதறியுள்ள பூமிகளையும் மக்களையுஞ் சேர்த்தலும் அவைகளைக் காத்தலும் நால்வகை சேனைகளை வகுத்தலும் ஆகிய நான்குவகை உறுதியே அரசனுக்கு வல்லபத்தை உண்டுசெய்யும் என்பது கருத்து.

(வி.) நீதிநெறி வழூவா செவ்வியக்கோலாம் செங்கோலைக் கையிலேந்தி இராட்சிய பாரந்தாங்கி இயற்றலும் தன்னை விட்டு சிதறியுள்ள பூமிகளையும் மக்களையும் கன்று காலிகளையும் மீட்டு தனதாளுகைக்குள் சேர்த்தலும், சேர்த்தவைகள் யாவற்றையும் சீர்திருத்திக் காத்தலும் தனக்குந் தனதரணுக்கும் ஆதரவாக நான்கு வகை சேனைகளை வகுத்தலுமே அரசனுக்கு வலதாம் என்பது விரிவு.

6.காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல நல்லனேல்
மீக்கூறு மன்ன நிலம்.

(ப.) காட்சிக்கெளியன் - பார்வைக்கு எளியவன் போல்காட்டிக் கொள்ளுவதுடன், கடுஞ்சொல்ல - கொடுமொழியற்றவனாகவும், நல்லனேல் - சகலருக்கும் நல்லவனாகவுமிருக்கும், மன்னநிலம் - அரசனது தேசத்தை, மீக்கூறு - மேலாகக் கொண்டாடுவார்களென்பது பதம்.

(பொ.) பார்வைக்கு எளியவன் போல் காட்டிக்கொள்வதுடன், கொடுமொழியற்றவனாகவும், சகலருக்கும் நல்லவனாகவுமிருக்கும் அரசனது தேசத்தை மேலாகக் கொண்டாடுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) பார்வைக்கு டம்பமில்லாதவனும் மிருதுவாக்குடையவனும் சகலருக்கும் நல்லவனாகவும் விளங்கும் அரசனது தேசம் சகலராலும் புகழப்படும் என்பது கருத்து.

(வி.) சகலருடைய பார்வைக்கும் வீண்டம்பாகாரச் செயல்களைக் காட்டிக் கொள்ளாதவனும் எக்காலுங்கடுஞ்சொற்களற்று மிருதுவான வார்த்தைகளைப் பேசுபவனும், தன்னவரன்னிய ரென்னும் பட்ச பாத மற்ற நல்லவனுமாக விளங்கும் அரசனது தேசத்தை சகலரும் மேலாகக் கொண்டாடுவார்கள் என்பது விரிவு.

7.இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண்ட னைத்திவ் வுலகு.

(ப.) இன்சொலா - இனியமொழியால், லீத்தளிக்க - ஈய்ந்துகாக்கும், வல்லார்க்கு - வல்லபமிகுத்த வரசருக்கு, தன்சொலாற் - தனது வாக்கினால், றான்கண்டனைத்திவ்வுலகு - உலகத்திற் கண்டு கேட்டப்பொருளில்லை என்னாதமையுமென்பது பதம்.

(பொ.) இனிய மொழியால் ஈய்ந்து காக்கும் வல்லபமிகுந்த அரசருக்கு தனது வாக்கினால் உலகத்திற் கண்டு கேட்டப் பொருளில்லை என்னாதமையுமென்பது பொழிப்பு.

(க.) எக்காலும் இனிய மொழியுடன் குடிகளைக் காத்து ரட்சிக்கும் அரசனுக்கு உலகத்தில் கண்ட பொருள் எவை வேண்டினும் அவை கிடைக்கும் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் குடிகளிடத்து முகமலர்ந்து இனிய மொழிகளாற் பேசி சீர்திருத்துவதுடன் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை அளித்துப் பாதுகாத்து ரட்சித்து வருவனேல் அவனுக்கு உலகத்தில் வேண்டும் பொருட்கள்