பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

740 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) இவ்விடங்கொடையும் ஈகையும் ஒரு பொருட் தரினும் கவிழ்ந்து காத்தலென்னும் சத்தியதன்மத்தை மேற்கொண்டு கொடையை நிலையாய தன்மமென்றும், அளித்தலை ஈகையென்றும், செங்கோலை நீதியினாளுகை என்றுங் குடியோம்பலை ஆளுகைக்குட்பட்டோரை ஆதரிக்குஞ் செயலென்று முன்னி இந்நான்கு வழியில் தனதரசை நடத்தும் அரசன் சகல அரசர்களினும் மேலாகப் பிரகாசிப்பான் என்பது விரிவு.

44. கல்வி

இஃது அரசயோகம் அமையினும், ஊன்றி நிலைக்கும் எண்ணமும் உறுதிபெறச்செயலுமாயக் கல்வியைக் கற்று தெளிவதில் வரிவடிவு அட்சரங்களாம் எழுத்துக்களை எண்ணத்தூன்றும் மொழி முதலாய்ந்துப் பொருளது தேர்ந்து அவற்றால் குவிந்துள்ள முதநூல், வழிநூல், சார்பு நூற்களை யுணர்ந்து நீதியிலும் நெறியிலும் ஒழுக்கத்திலும் அமைந்து தனது ராட்சிய பாரத்தைத் தாங்கி முத்திபேறாம் நித்தியானந்த நிருவாணமடைதற்கு கல்வியே ஊன்று கோலும் நிமையா விழியுமாதலின் அரசருக்கு வேண்டிய கல்வியை விளக்குகின்றார்.

1.கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக.

(ப.) கற்க - கல்வியைக் கற்குங்கால், கசடற - அதைக் களங்க மறக்கற்றல் வேண்டும், கற்பவை - கற்றுணர்ந்த யாவும், கற்றபி - தெரிந்தபின், வதற்குத்தக - கற்றுணர்ந்தவற்றிற்குத் தக்கவாறு, நிற்க - நிலைத்தொழுகல் வேண்டுமென்பது பதம்.

(பொ.) கல்வியைக் கற்குங்கால் அதைக் களங்கமறக் கற்றல்வேண்டும், கற்றுணர்ந்தயாவுந் தெரிந்தபின் கற்றுணர்ந்தவற்றிற்குத் தக்கவாறு நிலைத்தொழுகல் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) கல்வியைக் கற்க முயலுங்கால் அவற்றைச் தெள்ளறக் கற்றல்வேண்டும் தெளிந்தபின் அவைகளுள் போதித்துள்ள நீதி நெறி வழுவா நிலையில் நின்றொழுகல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) அரசன் கல்வியென்னும் அட்சரவித்தை அப்பியாசிப்பதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென்னும் பஞ்ச லட்சணங்களில் தேர்ந்து அவைகளால் திரட்டியுள்ள நீதி நூல் ஞானநூற்களைக் கசடறக் கற்றுத் தெளிந்து அப்போதனைகளாம் உலக நீதியொழுக்கத்திற் கற்ற வழி நிற்றல் வேண்டும் என்பது விரிவு.

2.எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டு
கண்ணென்ப வாழு முயிர்க்கு.

(ப.) எண்ணென்ப - எண்ணென்னும் எட்டாம் அகரமாய முதலெழுத்தும், வேனை - அதன் சார்பாய, யெழுத்தென்ப - மற்ற யெழுத்துக்களின், விவ்விரண்டுங் - பிரிவுரண்டும், கண்ணென்ப - உள்விழியென்பதாம், வாழுமுயிர்க்கு - வாழ்க்கை நலம் வேண்டும் மக்களுக்கென்பது பதம்.

(பொ.) எண்ணென்னும் எட்டாம் அகரமாய முதவெழுத்தும் அதன் சார்பாய மற்ற எழுத்துக்களின் பிரிவுரண்டும் வாழ்க்கை நலம் வேண்டும் மக்களுக்கென்பது பொழிப்பு.

(க.) அகரமாய முதலெழுத்து ஞான சாதனத்திற்கு உறிதியாகவும் அதன் சார்பாய வேனைய எழுத்துக்கள் விவேக விருத்திக்குறிதியாகவும் உள்ளதுகொண்டு மக்களது ஈடேற்றத்திற்கு ஆதாரமாயக் காரணக்கண்ணா யுள்ளதாம் என்பது கருத்து.

(வி.) கல்வி கற்றலில் கண்டு படித்தலே கல்வி, காணாது படித்தல் தெண்டக்கல்வியென முதுமொழிக் கூறலால், அகர உயிர் ஆதியாகத் தோன்றி அனந்தமெய் அசைவுற்றதும், அதன் பயனுஞ் செயலும் ஞானசாதகர்க்கு விளங்குமேயன்றி ஏனையோருக்கு விளங்காவாம். எண்ணென்பதை