பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/751

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 741

கணிதமாகவும் எழுத்தென்பதை இலக்கணமாகக் கொள்ளினும் கணிதமும் எழுத்தின்றியமையாவாம் இவ்விடம் ஏனை எழுத்தென்றமைந்துள்ளது கொண்டு மோனை எழுத்தாய முதலெழுத்தாம் அகரத்தையே ஓர் தனி முதற்பாகமாகவும் ஏனைய எழுத்துக்கள் யாவையும் ஓர் பாகமாகவும் வகுத்து, மக்களிவ்விரண்டையுங் கண்டு படிப்பரேல் உள்விழியாம் ஞானக்கண் உதயமாமென்று உயிர்நிலை வருக்க வீடேற்றத்தைக் கூறிய விரிவு. "ஊனக்கண்ணன்றென்றுளக் கண்ணளித்தபின், ஞானவநுபவ முரையென்று ரைத்தது" என்று ஞானிகள் வகுத்துள்ள ஆதாரங்கொண்டு ஆதியாய அகரவட்சரத்தின் சிறப்பையும் அஃது ஆதியாகத் தோன்றிய மதிப்பையும் அறத்துப்பால் சிறப்புப்பாயிரத்துட் கூறியுள்ளோம்.

3.கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத் திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

(ப.)கண்ணுடையரென்பவர் - ஞானக் கண்ணினையுடையோர் யாவரென்னில், கற்றோர் - கண்டு படித்தோரே யாவர், கல்லாதவர் - கண்டு கல்லாதவரோ, முகத்திரண்டு - முகத்தினிலிரண்டு, புண்ணுடையர் - புண்ணினை உடையேரென்பதற்கு ஒக்கும் என்பது பதம்.

(பொ.) ஞானக்கண்ணினை உடையோர் யாவரென்னில் கண்டு படித்தோரே யாவர், கண்டு கல்லாதவரோ முகத்தினில் இரண்டு புண்ணினை உடையோர் என்பதற்கு ஒக்கும் என்பது பொழிப்பு.

(க.) கற்றோரென்பது மேலோர், மேதாவியர், ஞானிகளென்னும் பொருளைத்தரும், ஆகலின் கற்ற வழியினின்று ஒழுகுவோரே கண்ணுடையாரும் கற்ற வழியினில்லாதோர் முகத்திலிரண்டு புண்ணுடையோரு மாவர் என்பது கருத்து.

(வி.) கல்லாதே கசடுற்றோரும் கற்றுங் கசடுற்றோரும் உள்ளாராதலின் அன்னோர் கற்றுங் கற்றவழியில் நில்லாதது கொண்டு முகத்தில் இரண்டு கண்ணற்றப் புண்ணுடையாரென்றும் தாம் கற்ற வழியில் நின்ற மேலோரைக் கண்ணுடையா ரென்றுங் கூறியவற்றிற்குச் சார்பாய் "முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே யானந்தம்" என்னும் உள்விழியினது சிறப்பையே ஊன்றி கற்றோரைக் கண்ணுடையாரென்று கூறிய விரிவாம்.

4.உவப்பத் தலைக் கூடியுள்ளப் பிரித
பலனைத்தே புலவர் தொழில்.

(ப.) உவப்பத் - சகல பற்றுக்களற்று, தலைக்கூடி - பழம்பொருட் சேர்ந்து, யுள்ளப் பிரித - உண்மெய்ப்புறமெய்ப் பிரிதலாய, லனைத்தே - அவ்வளவும் புலவர் - கற்றமைந்தோரின், தொழில் - செயலென்னப்படு மென்பது பதம்.

(பொ.) சகல பற்றுக்களற்று பழம் பொருட் சேர்ந்து உண்மெய்ப்புற மெய்ப்பிரிதலாய அவ்வளவும் கற்றமைந்தோரின் செயலென்னப்படும் என்பது பொழிப்பு.

(க.) புலவர் தொழில் யாதெனில் பற்றுக்களற்று புலன் ஐந்து ஒடிக்கிப் பழம் பொருள் தேர்ந்து இருபிறப்பாளராகப் பிரியும் அவ்வளவுமாம் என்பது கருத்து.

(வி.) காம வெகுளி மயக்கங்களால் உண்டாஞ் சகல பற்றுக்களுமற்று முதற் பொருளாம் மெய்ப்பொருட் கண்டு புளியம்பழம் போலும் ஓடுபோலும் உண்மெய்ப் புறமெய்ப்பிரிக்கும் ஐம்புலனடக்கி தென்புலத்தோராகும் அனைத்தும் புலவரது தொழில் என்பது விரிவு.

5.உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

(ப.) உடையார்மு - செல்வமுடையோர் முன்னிலையில், னில்லார்போலே - செல்வமில்லாதார் நிலையாததுபோல, கற்றுங் - கல்வியைக் கசடறக் கற்று,