பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தோதுமாபூதி
ரன்னீல முனிவர்க் காதியாய் நின்ற நாயகனாகு மாபூதி.

2உள்ளமெய்ப்பொருளை யுரைத்துநால்வாய்மெய் யுணர்த்திய
போதமாபூதி
கள்ளமெய்யகற்றிக் காட்சியை யருள கடவுளாய் நின்றமாபூதி
விள்ளுமிப்பூத வினையிரண்டாற்றி மிடியினை யகற்று மாபூதி
தெள்ள றஞானத் தெளிவதையூட்டி சேவைதந் தாண்ட மாபூதி.

3அண்டர்கட் கோமானாகிய தன்றியவனிக்கு மண்ணல் மாபூதி
தொண்டர்களிதயத் துருசினை யகற்றுஞ் சுத்தவாதார மாபூதி.
எண்டிசை யோர்களிதை யசுத்தத்திற்கேமமே யோது மாபூதி
பண்டுளமோன பாக்கிய மீய்ந்த பக்குவமான மாபூதி.

4பக்குவம் பழுக்கும் பான்மையீதென்னும் பரிமள வேதிமாபூதி
திக்குகளெட்டுங் கோணநன் நான்குஞ் சீர்பெறச் செய்த மாபூதி
மக்களுமனையு மாய்கை யென்றாற்றி வாய்மெ நான்கூட்டு மாபூதி
தக்கமெய்ப் பருவபால தானத்திற்றன்னறி வளர்த்த மாபூதி.

5தன்னையே யுணர்ந்து தன்னையே யடைந்து தானே தானான மாபூதி
மன்னவனென்னும் வாழ்க்கையினின்றும் வருத்துமென் றகன்றமாபூதி
தன்னுயி ரீய்ந்தேபிறவுயிரோம்பும் மன்னுயிர் முதல்வ மாபூதி
அன்னமு மாடையுரை யுளுமிய்ய வாக்கியாபித்த மாபூதி.
 
6வாக்கிய நான்கும் வழிபடுமாறு மாதவ முணர்த்து மாபூதி
ஆக்கிய நீதி நெறிதனி நின்று வன்பினை வளர்த்த மாபூதி
போக்கிலே சிந்தை போகவிடாது பூரண முற்ற மாபூதி
சாக்கைய முநிவனாகு மெம்பெருமான் சாரணர் போற்று மாபூதி.

7சாரணர் போற்றுந் ததாகத னாகுஞ் சம்புவே சங்க மாபூதி
காரணமானக் கடவுளா மெங்கள் கற்பகக் காட்சி மாபூதி
பூரண ஞானம் பொலிந்து கேவலப்பெண் புணர்ந்த போதத்தின் மாபூதி
சீரண முற்றோர் செயலுரவந்த தேவாதி தேவ மாபூதி.

8தேவாதி தேவனென்னு மெய்யடியார் தேட்டமே நாட்ட மாபூதி
மூவா முதல்வனென மறை தூற்றும் முத்தனே யாகு மாபூதி
காவாதளிக்குங் கண்ணுத லென்னுங் கருணையோ ருருவ மாபூதி
பாவாவெனுஞ் சொல் பற்றிய போதே பற்றினை யறுக்கு மாபூதி.

9பற்றினை யறுத்துப் பற்றிய நீதிப்பற்றினை பற்று மாபூதி
உற்றமெய் ஞான விளக்கினை நாட்டிவுள்ளொளி விளக்கு மாபூதி
கற்றறிந்தோராம் மெய்யறிவாளர் கண்ணினுண் மணிய மாபூதி
முற்றிய ஞான வாழ்க்கையி னிற்போர் முத்தமிட் டாடு மாபூதி.

10முத்தமிட் டாடுமுதல்வனா மெங்கள் முநிவன தாகு மாபூதி
சித்தத்தே நிற்குஞ் செயகுல குருவாந் தேற்றற வாழி மாபூதி
அத்தனா மெங்க ளருகனா மூலவாதனாய் நின்ற மாபூதி
முத்தியதாகும் பரி நிருவாணமோக்கமே யாகு மாபூதி.

என சற்குருவின் தேகத்தைத் தகனஞ்செய்த சாம்பல் தங்கடங்கள் கையிருப்பில் இருக்கும் அளவும் அப்பூதியைக் கொண்டாடிவந்து அம் மகாபூதி சாம்பல் முடிந்தவுடன் வேறு பொடி கையிலில்லாமல் சாக்கைய முநிவரின் தாயார் மாயாதேவி மரணமடைந்தவுடன் ஓர் பசுவானது தானேவந்து குழவிக்கு பால் சுரந்தூட்டியதை கண்டது முதல் சாக்கையர்கள் பசுக்களின் பேரில் அதிக அன்பும் ஆவலுங் கொண்டவர்களாகையால் பசுக்களின் சாணத்தை எடுத்து சுட்டு சாம்பலாக்கி வைத்துக்கொண்டு மாபூதி என்னும் பெயரை மாற்றி விபூதி என்னும் பெயரால் நாளதுவரையில் உபயோகித்து வருவதுமன்றி ஏழு அரசர்கள் கொண்டுவந்த சந்தனக்கட்டைகளின் மிகுதியை சாக்கையர்களும் சங்கத்தவர்களும் ஆளுக் கொவ்வொன்றை கொண்டுபோய் அவர் சிந்தனை மாறாதிருக்க உறைத்து திலதமிட்டு வந்த வழக்க மாறாது நாளதுவரையில் சந்தனத் திலதமிட்டு வருகின்றார்கள். (திலத மென்பது) பாலி பாஷையில் பிரதமகுரு வால்சுட்டிக்காட்டிய சுழிமுனை நோக்கநிலை யென்னப்படும்.

மணிமேகலை

பொன்னின் கோட்டது பொற்குளம்புடையது / தன்னலம் பிறர்கோழ தான்சென்றெய்தி
யீணாமுன்ன ரிளையருக்கன்று. / நான் முலை சரந்து நன்பா லூட்டலு.