பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/778

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

768 / அயோத்திதாசர் சிந்தனைகள்

உதவியாயிருந்து முடிக்க முயலினும் அவை முடியாமலே பொய்த்துப்போம் என்பது விரிவு.

9.நன்றாற்ற லுள்ளுந் தவருண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

(ப.) நன்றாற்றலுள்ளுந் - உபகாரச் செயலையே செய்ய முயல்வதினும், தவருண் - குற்றமுண்டாம், டவரவர் - அதாவதவரவருடைய, பண்பறிந் - குணச்செயலறிந்து, தாற்றா - செய்விக்காத, கடை - முடிவாமென்பது பதம்.

(பொ.) உபகாரச்செயலையே செய்ய முயல்வதினும் குற்றமுண்டாம், அதாவதவரவருடைய குணச்செயலறிந்து செய்விக்காத முடிவாமென்பது பொழிப்பு.

(க.) அரசன் தன் குடிகளுக்குச் செய்யும் உபகாரங்களில் குலபண்பு அறியாது கீழ்மக்களுக்குச் செய்யும் உபகாரத்தால் தீதே வந்து முடியும் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் தனது குடிகளுக்குச் செய்யவேண்டிய உபகாரத்தை ஒழுக்கமும் சீலமும் காருண்யமும் நன்றியறிதலும் பரோபகாரமும் உழைப்பாளிகளுமாய பண்பமைந்த மேன்மக்களுக்குச் செய்வதாயின் அவர்கள் சீர்பெற்று நன்றி மறவாது இராஜவிசுவாசத்தில் லயித்து தங்கள் வாழ்க்கை இன்னும் சுகம்பெற அரசனது சுகவாழ்க்கையை மேலும் மேலுங் கருதி அரசனுக்கோர் துன்பம் அணுகாது உபபலமாக நிற்பார்கள், பஞ்சபாதகமும் பேராசையும் வஞ்சினமும் சோம்பலும், நிறைந்து சீவகாருண்யமும் பரோபகாரமுமற்றப் பண்பமைந்த கீழ்மக்களுக்குச் செய்வதாயின் தாங்கள் அரசனது உபகாரத்தால் சீர்பெற்றவுடன் நெருப்பில் விழுந்த தேளை எடுத்துவிட கொட்டுவதுபோலும் வலையிற் சிக்குண்ட பாம்பை எடுத்துவிட கடிப்பது போலும் அரசனுக்கே தீங்கிழைத்து அரசைக் கைப்பற்ற முயல்வார்களாதலின் குடிகளுக்கு உபகாரஞ் செய்வதிலுந் தெரிந்து செய்யல் வேண்டும் என்பது விரிவு.

10.எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.

(ப.) எள்ளாத - அரசனானவன் செய்யும் சகல காரியங்களையும், வெண்ணி - தேறத் தெரிந்தே, செயல்வேண்டும் - செய்வித்தல் வேண்டும், தம்மொடு - தன்னோடுடன்படாச் செயலை, கொள்ளாத - தானே யேற்காத போது, கொள்ளா துலகு - உலகமு மேற்காதென்பது பதம்.

(பொ.) அரசனானவன் சகல காரியங்களைத் தேறத் தெரிந்தே செய்வித்தல் வேண்டும். தன்னோடு உடன்படாச் செயலை தானே ஏற்காதபோது உலகமும் ஏற்காது என்பது பொழிப்பு.

(க.) சகல காரியாதிகளையும் அரசன் தெரிந்து செய்வதே சுகமாம் அக்காரியங்களிலொன்று தனக்கே ஒப்பாதிருக்குமாயின் உலக மக்களும் ஒப்பாரென்பது கருத்து.

(வி.) அரசனானவன் எக்காரியாதிகளையும் நன்காய்ந்து தேறத் தெரிந்து செய்யல் வேண்டும் அக்காரியங்களிலொன்று தனக்கே நற்பயன்றாராது போமாயின் உலகமக்களுக்கும் அதுவேயாதலின் தான் தெரியாது செய்து தானே கொள்ளாததை உலகமுங் கொள்ளாது என்பது விரிவு.

52. வலியறிதல்

அரசன் தான் தொடுக்குஞ் செயல்களில் கூடுங் கூடா என்னும் வினையின் வலியறிந்தும் தனது தேக திடனிலை அறிந்தும் எதிரிகளின் வலியறிந்தும் தனது துணைவரின் வலியறிந்தும் ஓர் காரியத்தில் முநியல் வேண்டும் என்பதாம்.

1.வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

(ப.) வினைவலியுந் - தான் தொடுக்குஞ் செயல் கூடுங் கூடா வல்லபத்தையும், தன் வலியு - தனது தேக வல்லபத்தையம், மாற்றான் வலியுந் - தனது சத்துருவாய