பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/782

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

772 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) அரசன் தனது குடிபடை வல்லபத்தை நிலைக்கச் செய்யாது ஒப்புரவினர் வல்லபத்தை நம்பி அரசுசெலுத்துவானாயின் வல்லபமில்லாது கொண்டே அரசழிந்து போம் என்பது கருத்து.

(வி.) அரசனானவன் நான்குவகை சேனைகளின் வல்லபமின்றி தனதுறவின் முறையோர் வல்லபத்தை நம்பி அரசு செலுத்துவானாயின் தேசக்காப்புக்குரிய வல்லபமின்றியே அரசநிலை அழிந்து போம் என்பது விரிவு.

53. காலமறிதல்

அரசனானவன் தனது பகைவர்மீது படையெடுப்பினும் தேச சீர்திருத்த காரியாதிகளை நடத்தினும் காலமறிந்து செய்யல் வேண்டுமென்பதாம். காலமாவது வெய்யற்காலம், பனிகாலம், மழை காலங்களையும் தனது அமைச்சர்களும் பிரதானிகளும் மித்துருவாகவேனும் சத்துருவாகவேனும் இருக்கின்றார்களா என்னுங் காலங்களையும், தனது படைவீரர்களுந் தலைவர்களும் சுகமுற்ற வாழ்க்கையிலிருக்கின்றார்களா பிணியுற்ற நிலையிலிருக்கின்றார்களா என்னுங் காலங்களையும், பண்டிகளில் தானியம் நிறைந்துள்ள காலங்களையும் ஆயுதாசாலைகள் குறைவற்றுள்ள காலங்களையும் தனது முயற்சிகூடுங் காலங்களையுங் கூடா காலங்களையும் ஆய்ந்து தனது காரியத்தில் முயலல் வேண்டும் என்பதாம்.

1.பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

(ப.) கூகையை - வலிது மிகுத்தக் கோட்டானை, காக்கை - காகமானது, பகல் - பகல்காலத்தில், வெல்லும் - வெற்றிக்கொள்ளும். (அவைபோல்) யிகல் - பகைவரை, வெல்லும் - வெற்றிபெறுதற்கு, வேந்தர்க்கு - அரசர்களுக்கு, வேண்டும் பொழுது - காலம் வேண்டுமென்பது பதம்.

(பொ.) வலிது மிகுத்தக் கோட்டானை காகமானது பகல்காலத்தில் வெற்றிகொள்ளும், அவைபோல் பகைவரை வெற்றி பெறுதற்கு அரசர்களுக்குக் காலம் வேண்டும் என்பது பொழிப்பு.

(க.) மிக்க வல்லபமிகுத்தக் கூகையை பகல்காலத்தில் காகமானது வெற்றிக் கொள்ளுவதுபோல அரசனானவன் காலமறிந்து பகைவர்மீது படையெடுப்பின் வெல்லுவான் என்பது கருத்து.

(வி.) இரவுகாலத்தில் ஒரு கோட்டானை நூறு காக்கைக்கூடினும் வெற்றி பெறலாம், பகல்காலத்திலோ ஓரு காக்கையுடன் ஒரு கோட்டான் வெற்றி பெறமாட்டாவாம், அவைபோல் சதுரங்க சேனைவல்லபமிருப்பினும் அதனதன் காலமறியாது பகைவர்மீது படையெடுக்கும் அரசன் வெற்றி பெறமாட்டான், காலமறிந்து படையெடுப்போனோ பகைவரை வெற்றி பெறுவான் என்பது விரிவு.

2.பருவத்தோ டொட்ட வொழுக றிருவினை
தீராமெ யார்க்குங் கயிறு.

(ப.) பருவத்தோ - அரசன் விருத்தி காலத்தை, டொட்ட - அநுசரித்து, வொழுக - எக்காரியத்தையும், நடாத்தல் வேண்டும், றிருவினை - வளர்பிறைச்செயல் தேய்பிறைச்செயலிரண்டினையும், தீராமெ - சரிவற வாராயாது செய்தல், யார்க்கும் - யாவருக்கும், கயிறு - தாங்களே சுறுக்கிட்டுக் கொள்ளுங் கயிற்றிற்கு ஒப்பாம் என்பது பதம்.

(பொ.) அரசன் விருத்திகாலத்தை அநுசரித்து எக்காரியத்தையும் நடாத்தல் வேண்டும், வளர்பிறைச்செயல்தேய்பிறை செயலிரண்டினையும் சரிவர ஆராயாது செய்தல் யாவருக்கும் தாங்களே சுறுக்கிட்டுக் கொள்ளுங் கயிற்றுக்கு ஒப்பாம் என்பது பொழிப்பு.

(க.) அரசன் தொடுக்குங் காரியாதிகள் யாவையும் விருத்திகாலங் குறைவு காலமறிந்து செய்யல்வேண்டும், அங்ஙனங் காலமறியாது செய்தல் தங்கள்