பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 77

மதப்போர்புரிந்து மாளா துக்கத்தில் ஆழாமல் சுதேச சீர்திருத்தத்தை நாடி சுகமடைய வேண்டுமென்பதேயாம்.

- 1:40 ; மார்ச் 18, 1908 –

17. பேதாதை - பேதாளம்

சிலகாலங்களுக்குமுன் நம்முடைய தேசத்தின் அதிகாரிகள் கிராமங்களைவிட்டு மறு கிராமங்களுக்குப் போகவேண்டுமாயினும் விழாக்கள் கொண்டாடுங் காலங்களிலேனுந் தூர கிராமவாசிக்கு அறிக்கை செய்யுமாறு ஓர் பெருந்தாதை யூதுதல் கொம்பூதுதல் என்னும் குழற்கருவியும் மூன்றடி சுற்றளவு நான்கடி சுற்றளவில் கைத்தாளமும் செய்துவைத்துக்கொண்டு ஊதுதலும் அடிப்பதுமாய் இருந்தார்கள்.

பெருந்தாதையை வாயில் வைத்து ஒரு மனிதன் பெருமூச்சு கொண்டு ஊதுவானாயின் தூரத்திலுள்ள கிராமவாசிகளுக்குக் கேழ்ப்பதுடன் அருகிலுள்ளவர்களின் காது செவிடு பொத்து விடுவதுபோல் கேட்கும். அதின் பெருஞ்சப்த காரணங்கொண்டு அதைப்பேதாதை என்றும் அத்தாளமானது தட்டுங்கால் காதடைத்துக் கொள்ளும்படியான பெருஞ்சப்தத்தைக் கொடுக்குங்காரணங்கொண்டு அதைப் பேதாளமென்றும் வழங்கி வந்தார்கள்.

பண்டி என்பது வண்டி என்றும், பைராக்கி என்பது வைராக்கி என்றும், பரதனென்பது வரதனென்றும், பேதவாக்கியம் என்பது வேதவாக்கியம் என்றும் வடமொழி மாறுகொள வழங்குவதுபோல் மேற்கூறியுள்ள பேதாள மொழியானது வேதாளமென வழங்கிவந்தது. இத்தகைய வார்த்தைகளின் உற்பவமும் அதன் பொருளும் நன்குணராப் பொய்ப்புலவர்கள் தங்கள் மனம்போனவாறு வேதாளமென்னும் ஓர் பேயிருந்ததென்றும் அஃதோர் வேளாளன் விதைத்திருந்த பயிறுகள் யாவையும் மேய்ந்துவிட்டுப்போவது வழக்கமென்றும் அவ்வகை மேய்ந்துக் கஷ்டப்படுத்திவந்த வேதாளத்தைத் திருவள்ளுவ நாயனார் துறத்திவிட்டபடியால் அவருக்கு அவ்வேளாளன் தனது மகளைக் கொடுத்தானென்றும் பொய்யுக்குப் பொய்ப் பொருந்தாப் பொய்களை எழுதி தன்ம சங்கத்தின் அறஹத்துக்களின் மகத்துவங்களைக் கெடுத்து வைத்திருக்கின்றார்கள். வேதாளமென்னும் ஓர் பேய் உண்டென்று புர்வ சரித்திரங்களிலேனும் பூர்வ நூற்களிலேனும் வரைந்திருக்கின்றார்களா, தற்கால அநுபவத்திலேனும் நிகழ்ந்துவருகின்றதா இல்லையே, பேதாளம் - வேதாளம், ஓர் தாளக்கருவியை பேயென்று கூறியுள்ள அவர்கள் பேயநிலையை நாம் விசாரிக்க வேண்டிய விஷயமில்லை. தன்மசங்கஞ்சேர்ந்து பெண்சாதி பிள்ளைகளென்னும் பற்றுக்களற்ற அறஹத்தாகும் திருவள்ளுவ நாயனாருக்கு ஓர் பெண்சாதியுங்கட்டி பொய்யிற்குப் பொய் மூட்டுக்கொடுத்து விட்டார்களே இதையே விஷயமாகக்கொண்டு வேதாளத்தை விவரிக்க நேரிட்டது. ஆதலின் பாப்பான் பறைச்சியை வைத்துக்கொண்டு ஏழுப்பிள்ளைகள் பெற்ற பொய்க் கதையையும் நாயனாருக்குப் பெண்சாதி கட்டி வைத்தப் பொய்க்கதையையும் திருவள்ளுவ நாயனார் திரிக்குறள் தெளிப்பொருளுரை வெளிவருங்கால் தெள்ளற விளக்குவாம்.

- 1:39, மார்ச் 11, 1908 –

18. ஜைன மத விவரம்

ஜைநம் என்னும் மொழிக்குப் பாலிசூத்திரம் (பஞ்சமார்ஜினாத்தோஜ்ஜி ஜின) அதாவது சாக்கையச் சக்கிரவர்த்தித் திருமகனாகிய சித்தார்த்தியவர்கள் போதி விருட்சமென்னுங் கல்லாலமரத்தடியில் உட்கார்ந்து பொறிவாய லைந்தினையும் குணத்திரய காமத்தையும் சினத்தையும் வென்று மாணாக்கருக்கு அறிவுறுத்தி பிம்பாசார நகரம் சென்று அங்குள்ள மலையிற் சிலகாலந் தங்கி பாணினியருக்கும் அகஸ்தியருக்கும் போதித்திருந்த சகடபாடையாம் சமஸ்கிருதத்தையும் திராவிடபாஷையாம் தமிழையும் பிம்பாசார அரசனுக்கு வரிவடிவமாய்ப் போதித்து அம் மலையில் தசபாரதம், தசபாரமிதம்,