பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 81

மொழியினுட் பொருளை கன்மபாகை என்றும், நன்மெய்க் கடைபிடியுங்கள் என்னும் மொழியினுட் பொருளை அர்த்தபாகை என்றும் இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்னு மொழியினுட்பொருளை ஞானபாகை என்றும் வகுத்து ஒவ்வொரு மொழியின் சாதனமே முத்திக்கு ஆதாரமாயிருந்து நித்தியநிலைப் பெற்றபடியால் கன்மபாகத்தால் மெய்யறமும், அர்த்தபாகத்தால் மெய்ப்பொருளும், ஞானபாகத்தால் மெய்யின்பமுந் தோன்றி வீடுபேறாம் நிருவாணம் அடைகின்றபடியால் மூன்றுபேதந் திரிபேதம் என்றும் வழங்கிவந்த வாக்கியங்களை அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கு பேத வாக்கியங்களாக வழங்கலாயினர்.

- 1:42; ஏப்ரல் 1, 1908 –

இத்தகைய பேதவாக்கியங்களை திரிபேதமென்றுஞ் சதுர்பேதம் என்றும் சப்தபேதம் என்றும் வழங்கிவந்தார்கள்.

பின்கலை நிகண்டு

ஆதிநூ லெழுதாக் கேள்வி / யாரணம், ஒத்து, சாகை.
யேதமில் சுருதிதன்னோ / டிரிக்கிவை யேழும் வேதம்
வேதநூற் பொருளினாமம் / விதித்திடும் ஞானபாகை
யாதியாங் கருமபாகை / யருத்தபாகையுமாமென்ப.
மெய்தெரி காரணந்தான் / வேதத்தில் ஞானபாகை
உய்யுமெய் யறமுறைக்கு / முற்றநல் லர்த்தபாகை
துய்ய நற் செயலைப்பற்றல் / சுத்தநற் கருமபாகை
வெய்யபௌடிகமேயாதி / விரியுபநிடதமாகும்.
ஏமமாம் இரண்டாம் வேத / மிசையித்திரியத்தோடு
தோமிலா யசுவாமென்று / சொல்லுவர் நீதிநூலோர்
சாமமே மூன்றாம் வேதஞ் / சாற்றும் பேரின்பப்பேற்றை
வாமமுன் மொழியொன்றில்லா / வதர்வண வேதமாமே.
தந்துரை புனைந்துரைத்தல் / சார்ந்த பாயிரத்தினோடு
முந்திய பதிகமே நூன் / முகவுரை முப்பேராகும்
அந்தமா மாகமத்தோ / டாரிடம் பிடகமற்றுந்
தந்திரம் பனுவலோடு / சமயஞ் சூத்திரமு நூற்பேர்.

இத்தியாதி வேதவாக்கியங்களால் திரிபிடகமென்றும், முதுமொழி என்றும், முதநூ லென்றும், ஆதி நூலென்றும், அறனாற்கூறிய அற நூலென்றும் வழங்கிவந்தார்கள்.

நன்னூல்

வினையினீங்கி விளங்கிய வறிவின் / முனைவன் கண்டது முதநூலாகும்.

திரிக்குறள். புத்தசங்கத்தோர் சாற்றுக்கவிகள்

இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கும்
முன்பறிய சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்
குள்ள வறி தென்றவை வள்ளுவருலகங்
கொள்ளமொழிந்தார்க்குறள்.
நான் மறையின் மெய்ப்பொருளை / முப்பொருளா நான்முகத்தோன்
றான் மறைந்து வள்ளுவனாய்த் / தந்துரைத்த நூன்முறையே
வந்திக்கச் சென்னிவாய / வாழ்த்துக நன்னெஞ்சம்
சிந்திக்கக் கேட்கச் செவி.

அருங்கலைசெப்பு

என்று முண்டாகி இறையால் வெளிப்பட்டு நின்றது நூல் என்று உணர்.

புத்தபிரானால் வரிவடிவாகும் வடமொழியும் தென்மொழியும் இயற்றியருளியப் பின்னரே பேதவாக்கியார்த்தத்தை நூலென்று வழங்கினர். அதற்கு முன்பு மகடபாஷை வரிவடிவமின்றி ஒலிவடிவாய் இருந்ததினால் திரிபிடகம் என்னுந் திரிபேதவாக்கியங்கள் வரிவடிவற்ற செய்யாமொழியாயிருந்து சுருதிமொழியெனும் பெயர்பெற்று சருவசீவர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்கும் அறஹத்துக்கள் என்னும் அந்தணர்பாற் செய்யாமொழியாய் இருந்தது.

திரிக்குறள் - புத்தசங்கத்தோர் சாற்றுக்கவி

செய்யாமொழிக்குந் திருவள்ளுவர் மோழிந்த
பொய்யாமொழிக்கும் பொருளொன்றே - செய்யா