பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இம்மெப்புகழும் இனிச்செல்கதிப்பயனும்
தம்மெத் தலைப்படுத்துவார்.

தொல்காப்பியம்

மல்குநீர் வரைப்பினைந்திர நிறைந்த,

மணிமேகலை

இந்திரகோடனை விழாவணிவிரும்பி.
இந்திரர் சிறப்புச் செய்வோர் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை.

சிலப்பதிகாரம் இந்திரர் விழாவூரெடுத்த காதை காண்க.

சீவகசிந்தாமணி

ஆசையார்வமோடையமின்றியே / யோசைபோயுல குண்ணநோற்ற பி
னேசுபெண்ணொழித் திந்திரர்களாய்த் / தூயஞானமாய்த் துறக்கமெய்தினார்.

காசிக்கலம்பகம்

புரவுபூண்டி ந்திர திருவொடும்பொலிந்து / முடிவினு முடியா முழுநலங்கொடுக்கு.
விடுத்துவிட் டிந்திர திருவும்புவி / வெண்குடைக்குளிடு மரசாட்சியுங்
கடுத்ததும்புவனத்தரைத்தேடுவர் / காதலித்து வருந்திருக்காசியே.

இத்தேசத்திலிருந்த சகலமாக்களும் இந்திரராம் புத்தரை சிந்தித்துவந்த சாதனத்தால் இந்தியதேசம் என்று வழங்கும் இந்நாட்டில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் வந்து தோன்றி அவரவர்கள் சமயாசார நூற்களை ஆராய்ச்சிசெய்ய ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் வேஷ பிராமணர்களால் புத்ததன்மம் சீர்குலைந்து சங்கங்களும் அழிந்து சங்கத்தோராகும் மேன்மக்களும் நிலைகுலைந்து வேஷபிராமணர்கள் வாக்கு செல் மிகுதியிலிருந்தபடியால் அவர்களுக்குப்பின்பு தோன்றிய மகமதிய ராஜாங்கத்தாரிடமும் அதன்பின் தோன்றிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரிடமுந் தங்கள் வாக்கை ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையில் வைத்துக்கொண்டார்கள்.

இந்தியர் வேதம் இந்தியர்மார்க்கம் எதுவென்று விசாரிக்க ஆரம்பித்தவர்கள் புத்தபிரானால் விளக்கிய முத நூலாகும் பேதவாக்கியங்களையும் அதன் உபநிட்சயார்த்தங்களையும் வாரணாசியென்னுங் காசியில் வெகுவாகப் பரவச் செய்தபடியால் விசாரிணைமிகுத்த மேன்மக்களாகும் ஐரோப்பியர்கள் காசிபட்டணஞ்சென்று இந்தியர் வேதத்தை விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

அவ்விசாரிணைக்கு எதிர்தோன்றியவர்கள் எதார்த்த பிராமணர்களின்றி வேஷப் பிராமணர்களாய் இருந்தபடியால் பேதமென்னும் வாக்கியத்தின் பொருளும் அப்பேதமொழிகள் எத்தனை என்றும் அப்பேதமொழி ஒன்றுக்கு எத்தனை உபநிட்சயார்த்தங்கள் இருந்தது என்றும் அதன் அந்தர அர்த்தம் அறியாமல் வேதங்கள் என்றால் பெரியபெரியக் கட்டுச்சுவடிகள் என்றும் அதில் மந்திரம், பிராமணம், தோத்திரங்கள் அடங்கியிருக்கின்றன வென்றும் இவ்வேதம் கள்ள மாயங்களினின்று நீங்கியக் கடவுளின் வாக்கினின்று புறப்பட்ட தற்பூரணமொழியென்று கூறி இவ்வேதத்தைக் கடவுள் பிரம்மாவுக்குப் போதித்தும், பிரம்மா முநிவர்களுக்குப் போதித்தும், முநிவர்கள் தங்கள் மாணாக்கர்களுக்குப் போதித்ததாக வரைந்திருக்கின்றார்கள்.

இவ்வேதம் தோன்றுவதற்கு முன்பே கடவுளும், பிரம்மாவும், முநிவர்களும், மாணாக்கர்களும் இருந்திருக்கின்றபடியால் கடவுள், முநிவர், பிரம்மா என்னும் பெயர்கள் யாவும் புத்த தன்ம நூற்களிலிருந்தே வரைந்துக்கொண்டார்கள் என்பது திண்ணம். இவ்வேதமும் இத்தேசத்திற்குரிய பாலியாம் மகடபாஷையிலேனும் சமஸ்கிருதமாம் சகடபாஷையிலேனும் வரையாமல் தாராஷ்கோ என்னும் பாரீசு சாதியோருள் ஒருவரால் பாரீசு பாஷையில் எழுதிவைத்து கிடைத்தப்பின்பு மற்றுஞ் சிலர்களால் சகடபாஷையில் எழுதிக் கிடைத்தது.

இவைகள் யாவற்றையும் சிறுக சிறுக சேகரித்து புத்தகருபப்படுத்திக் காண்பித்த மேன்மக்கள் யாரெனில்:


1- வது. கர்னல் பேர்லியர்.
2 - வது. சர். இராபர்ட்ஸ் சேம்பர்.