பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


சாமியென்னு மொழியும் பூர்வ பௌத்தர்களால் தோன்றியதா, அன்றேல் இந்துக்களால் தோன்றியதா, என்பதை நூலாதாரத்துடன் பொருந்திய பொருளுடனும் அமைந்தவனுபவத்துடனும் தருக்கசங்கிரமத்துடன் தெளிந்துக் கொள்ளவேண்டும் என்பதே எமதாவல்.

மா.பாலசுந்திரன், சேலம்.

விடை : தாம் வினாவியுள்ள சங்கைகளிலனந்த வற்றிற்கு நமது பத்திரிகையில் விளக்கங் கூறியுள்ளோம், ஆயினுந் தாம் தருக்க சங்கிரமத்துடன் வினாவியுள்ளதால் தருக்கம் மூவகையாக நிகழும். கொட்டை முந்தியதோ பனை முந்தியதோ வென்னும் வினாவிற்கு எக்கொட்டைக் கொப்பனை யென்னும் எதிர்வினாத்தோன்றும், செத்தோன் பிறப்பானோ பிறவானோ வென்னும் வினாவிற்கு வனமகனோ இனமகனோ வென்று மெதிர்வினாத் தோன்றும், ஆகாயப்பூ பழயதோ புதியதோவென்னும் வினாவிற்கு எதிர் வினாவுமின்றி விடையுமன்றி மௌனமே நிலையாகும் இத்தகைய தருக்க நீதியில் தமது இந்துவென்னு மொழிக்கு அவற்றின் மொழி முதல் தோற்றமெவை யென்னு மெதிர்வினாத் தோன்றும். அத்தகைய எதிர்வினாத் தோற்றவிடாது இந்துவென்னு மொழிமுதற் பொருளையுமவை யாவரால் தோற்றிய வென்பதையும் இவ்விடம் விளக்குவாம். மிலேச்சர், மிலைச்சரென்னு மொழி ஆரியரென மாறியது போல இன், இனா, இன்டி யென்னு மொழி இந்து வெனமாறி வழங்கலாயிற்று அம்மொழியும் அக் கூட்டத்தோர் செயல்களுக்குத் தக்கவாறு பௌத்தர்களாலளித்த பெயர்களேயாம்,
சிவமதமென்பதும் விஷ்ணுமதமென்பதும் வேதாந்தமதமென்பதும் பொருள் கெட்டு ஐந்நூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிதாகும். இ வற்றுள் சிவமத ஆக்கியோன் மத்துவாச்சாரி நீலகண்ட சிவாச்சாரி இவ் விருவரேயாவர் விஷ்ணுமத ஆக்கியோன் இராமானுஜச்சாரியரேயாவர் வேதாந்தமத ஆக்கியோன் சங்கராச்சாரியே யென்பர்.
பாலிபாஷையில் சிவமென்னு மொழிக்கு அன்பென்னும் பொருளும், சைவமென்னு மொழிக்கு தன்னை யறிதலென்னும் பொருளுமமைந்துள்ளதை பாலி நிகண்டிற் காண்க.
அவற்றையே தமிழில் திருமூலர் கூறியுள்ளதாவது :-

அன்பும் சிவமு மிரண்டென்ப றவிலார்; அன்பே சிவமாவ தியாருமறிகிலார்.

அகப்பேசித்தர்

"சைவமாருக்கடி யகப்பே தன்னை யறிந்தவர்க்கே / சைவமானவிட மகப்பே தானாக நின்றத"

சிவமென்னு மொழியே சிவன் என்னும் ஆண்பால் விகுதியாகத் தோன்றியவற்றிற்கு காரணம் யாதென்னிலோ புத்தபிரான் அன்பே ஓர் உரு கொண்டு தனது சங்கங்கள் யாவற்றிற்கும் அன்பை வளர்க்கும் வழிவகைகளைப் போதித்துவந்த போதனையைக் கொண்டு அவருக்குள்ள அளவுபடா அன்பினைக் கண்டும் அவருக்குச் சிவனென்னும் பெயரை அளித்ததுடன் சிவகதி நாயகனென்றும் வழங்கி வந்தார்கள் இச்சிவமென்னு மொழியும் சைவமென்னு மொழியும் பௌத்தர்களால் தோன்றியவைகளேயாம்.

அறநெறிச்சாரம்

"அவன் சொலிவன் கொலென்றையப்படாதே / சிவன்கண்ணே செய்மின் கண்சிந்தை - சிவன்
றானும், நின்று கால்சீக்கு நிகரிகழும் பிண்டிக்கீழ் / வென்றிச்சீர் முக்குடையான் வேந்து.”

சிலப்பதிகாரம்

சினவறற்றேவன் சிவகதி நாயகன்

விஷ்ணுவென்னு மொழி கல்லையே சிலாரூபமாகக் கொண்டு கல்லையே பீடமாகக் கொண்டுள்ளவற்றிற்கு விட்டோ விட்டோ போவென்னு மொழியையே விட்டுணு விஷ்ணுவென வழங்கலாயினர். ஜலக்கிரீடினன் கிரிட்டின னென்னு மொழியே கிருட்டன் கிருஷ்ணனென வழங்குவதுபோலாம். இவை தற்கால இந்துக்களென்போரால் தோற்றிய மொழியே யாம்.
வேதாந்தமென்பது வேதமொழிகளின் உட்பொருள் நுட்பங்களை விளக்கும் வேத முடிபுரையாம் வேத அந்தம், உபநிட்சயார்த்தம். உபநிடத