பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

கிறிஸ்துவின் காலத்திய கலியாணத்தி லீயந்தது மயக்கமற்ற மதுவும் தற்காலம் மாறுபடுத்திக்கொண்டது மயக்கமுற்றமதுவுமாதலின் கிறிஸ்துவின் மாணாக்கர் மதுவை அருந்தலாகாதென வற்புறுத்திக் கண்டித்திருக்கின்றார்கள்.

(வருமாறு) அப்போஸ்தலனாகியப்பவுல் தீத்துவுக்கு எழுதின நிருபம்

முதலாமதிகாரம். 7-வசனம், ஏனெனில் கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக் காரனுக்கேற்ற விதமாய் குற்றஞ்சாட்டப் படாதவனும், தன்னிஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப் பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனுமா இருத்தல் வேண்டும் எனக் கூறியுள்ளவற்றுள் மதுபானத்தை அகற்றியிருக்கின்றார் களென்பது தெளிவாக விளங்குகின்றது. ஆதலின் கிறிஸ்துமதக் கடவுளுக்கும் வேதத்திற்கும் மதுபானம் உடன்பாடல்லவேயல்ல என்பது துணிபு.

- 6:11, ஆகஸ்ட் 21, 1912 –
 

100. தீபவதி நதி ஸ்னானம்

இதையே தற்காலம் தீபாவளிப் பண்டிகையெனக் கொண்டாடி வருகின்றார்கள். பெளத்த தன்மம் இந்திரர் தேசமெங்கும் பரவியிருந்த காலத்தில் மடங்களிலுள்ள சமணமுனிவர்களால் ஏதேது பொருட்களாகும் நூதனவஸ்துக்களைக் கண்டுபிடிக்கின்றார்களோ அதனை அத்தேசத்தை யாளும் அரசர்களுக் கறிவித்து அவர்களால் குடிகளுக்குத் தெரிவிக்கக், குடிகள் யாவரும் அவ்வஸ்துவை சகலருக்கும் உபயோகமாம் பொருட்டு விருத்தி செய்து மற்றும் வஸ்துக்களை மக்களுக்கு உபயோகமாம் பொருட்டு கண்டு பிடிப்பதற்காய் கண்டவஸ்துவின் காலத்தை வருடந்தோருங் கொண்டாடி வருவது வழக்கமாயிருந்தது. அவற்றுளிஃது எள்ளிநெய் கண்டுபிடித்த காலமாக்கும். இந்நெய்யைக்கொண்டு தீபவதி நதியிற் தலை முழுகி பலவகைப் பலகாரங்களைச் சுட்டுப் பலருக்கு மிட்டுண்ணச் செயலானது நாளது வரையிலும் மாறாது வழங்கிவருகின்றபடியால் தீபவதிநதி ஸ்னான பண்டை ஈகையென்பதை மாற்றி தீபாவளி பண்டிகை என வழங்கி வருகின்றார்கள். இதனை நமது பௌத்த சோதிரர்கள் எள்ளிநெய்க் கண்டுபிடித்தக்காலமெனக் கொண்டாடு - வதுடன் பலகாரஞ்செய்து அன்பர்களுட னுண்பதுடன் ஏழைகளுக்கு மிட்டுண்டு பண்டை ஈகையைக் கொண்டாடும்படி வேண்டுகிறோம்.

- 6:22; நவம்பர் 6, 1912 -
 

101. புருசீகரின் வேஷம்

வினா : நமது இந்திரர்தேயத்தில் திராவிடர்களாம் தமிழ் பாஷைக் குடிகளே பெருந்தொகையினராக இருந்தவர்களென்றும் அவர்களே தென் பரதகண்டத்தி னதிகாரிகளாகவும் சாஸ்திரவல்லவர்களாகவும் ஞானிகளா கவும் சித்தர்களாகவும் இருந்ததாகத் தாங்கள் வரைந்து வருவதுடன் சரித்திரக் காரர்களாலும் திராவிடர்களே இத்தேசப் பூர்வக்குடிகளென்று கொலம் போ சென்பவர் அமெரிக்காதேசத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே திராவிட பெளத்தர்கள் அவ்விடஞ் சென்று சாக்கையர் வியாரங்கட்டிக் குடியேறியிருந்த மிக்கத் திடமுடையவர்களென்று வரைந்திருப்பதையுங் காண்கின்றேன். இத்தகையப் பெருந்தொகையானவரும் வல்லவர்களும் விவேகிகளு மானோர்களை புருசீக நாட்டனின்று இந்திரர் தேசத்துள்ளக் குமானிடர் தேசத்துள் வந்து குடியேறிய சொற்பக் குடிகளாகிய புருசீக தேசத்தார் பெருந் தொகையோரான திராவிடர்களையும், ஆந்திரர், கன்னட மராஷ்டர் களையும், யுத்த முதலாய விஷயங்களால் ஜெயிக்காது பௌத்த அறஹத்துக் களாம் அந்தணர்களைப்போல் வேஷமிட்டு தங்களுக்குள் அடக்கிக் கொண்டார் களென்பது சிலரால் சங்கிக்க இடங்கொடுப்பதுமன்றி எமக்குங் கிஞ்சித்து சங்கைக் கிடங்கொடுக்கின்றபடியால் இவற்றை விளக்கியாட் கொள்ளுவீராக.

வீ. முனிசாமியர், புதுவை.