பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /79


ராஜவிசுவாசத்தி லயித்து சத்துருக்களை ஜெயங் கொள்ளுங்கோள். மற்றப்படி சத்துருக்கள் சாமியைக்கும் பிட்டாலும் உங்களைக் கொல்லுவார்கள் மதங்களைச் சார்ந்தாலுங் கொல்லுவார்கள் புராணங்களைப் படித்தாலுங் கொல்லுவார்கள் அவர்கள் வைத்துள்ள சாதிகளையும் மதங்களையும் விட்டகலுங்கள் அகலுங்கள் அன்றே சுகம் பெறுவீர்கள்.

- 6:40; மார்ச் 12, 1913 –
 

103. சாமி சங்கைத்தெளிவு

ஸாமி - சாமி என்னு மிருமொழிகளுள் ஸாமி, என்பது மகடபாஷை, சாமி என்பது திராவிட பாஷை. இவ்விரண்டு மொழியினுள் ஸாமி, என்னும் மொழியே தற்காலம் வழங்கிவருகின்றது. ஸாமி, என்பதற்குப் பொருள் மேலெழுற்சி, பரிநிருவாணமென்னப்படும். இதைய நுசரித்தே சீவக சிந்தாமணியுள் "ஸாமிநாள் சார்ந்ததன்றே என்று பகவனது பரிநிருவாண நாளைக் கொண்டாடி யிருக்கின்றார்கள். புத்தருக்குரிய ஆயிரநாமங்களில் ஸாமி, என்பதும் ஓர் பெயரென்றே நிகண்டில் "தீர்த்தன்மால் பகவன் ஸாமி எனவும் வகுத்திருக்கின்றார்கள். சாமி என்பது பொருளற்ற வரிவழக்காம்.

- 6:44, ஏப்ரல் 9, 1913 –
 

104. திருமணச் சடங்கு

வினா : உலகின்கண் நடந்தேறிவரும் விவாஹக் காலங்களில் மணமகனும், மணமகளும் மணவரையில் வீற்றிருக்கச்சே கடைசியாக குருக்கே திறைச் சிலைக்கட்டி மணமகன் வலதுக்காலை வெளிப்புறமாக நீட்டச்செய்து ஜலங்கொண்டு கால் சுத்தஞ் செய்தானபிறகு பெண்ணுக்குரிய தாயார் மாமி மெட்டுமாமி மெட்டென்று கூறி கால் விரலில் போடுகின்றார்கள். இவ்விதமான விஷயங்கள் நமது பூர்வீக பௌத்த மார்க்கக் கொள்கையா அன்றேல் நமது தேசத்தார் போதிப்பது, புத்ததருமமும் செய்கையெல்லாம் வேஷப்பிராமணர்ச் செய்கையுமாயிருக்கின்றபடியால் இந்த நூதன சாதிகளின் கொள்கையா.

எஸ். முனிஸ்வாமியர். ரங்கூன்.

விடை : அன்பரே! தாம் வினவியுள்ள சங்கை பௌத்ததன்மத்தைச் சார்ந்ததுமன்று இந்து மதத்தைச் சார்ந்தது மன்று மத்தியில் தோன்றுங் குடும்பத்தோர்களால் தோன்றிய வழக்கமாக்கும். அதாவது மாமியானவள் தன் பெண்ணை ஒருவனுக்குத் தத்தஞ் செய்தவுடன் மணவரைத்திறை மறைவி நின்று மறுமகன் பாதத்தைப்பிடித்து தன் மகளை யாதொரு குறைவுமின்றி காப்பாற்றவேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுவதற்கு பாவனை யாக வெள்ளியினால் மெட்டென்னும் மோதிரஞ் செய்து அவன் காலைக் கழுவி விரலிற் போடுவது வழக்கம். அவ்வந்தரார்த்தம் தெரிந்தும் சிலர் செய்வதுண்டு தெரியாமலும் செய்வதுண்டு. மனம் போல மாங்கல்யமென்பது காட்சியாதலின் மறுமகன் காலைப்பிடிப்பதினாலுமோர் பயனில்லை மெட்டியிடுவதினாலும் ஓர் பயனுமில்லை என்பதே துணிபு.

- 6:46; ஏப்ரல் 23, 1913
 

105. ஆன்மாவிற்கு இறப்புமில்லை பிறப்புமில்லை

ஆன்மாவிற்கு இறப்புமில்லை பிறப்புமில்லை எனக் கூறிய அன்பரே! ஆன்மா என்னும் மொழி வடமொழியா தென்மொழியா என்பதுணராது கூறிவிட்டீர் போலும். அஃது வடமொழியிலும் பாலிமொழியேயாம். அதன் பொருள் புருஷனென்னப்படும். அப்புருஷனென்னும் பொருளைக் கொண்டே "அநான்ம" மென்னு மொழி தோன்றியுள்ளதும் அவற்றை வாசுதேவமனன மென்னும் நூலிலும், மணிமேகலை என்னும் நூலிலுங் கூறியுள்ளவற்றை பரக்கக் காணலாம். அதனினும் ஓர் உருவந்தோன்றிய பின்னரே ஆன்ம மன்னும் மொழியுந் தோன்றுமேயன்றி ஓருருவந் தோன்றாவிடத்து ஆன்ம மென்னு மொழி தோன்றாதென்பதே திண்ணம். ஆதலின் புருஷனென்னும் உரு தோன்றி ஆன்மனென்னும் பெயருண்டாய விடத்து பிறப்புண்டென்பதும்