பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


உலகோர் கொண்டாடுந் தெய்வங்களில் ஆதி கடவுள், ஆதி தெய்வம், ஆதிபகவனென விளங்கிய புத்தபிரானுக்கே அப்பெயருரியதாம். எவ்வகையிலென்பீரேல் இராஜனாகப் பிறந்தவரும் அவரே தன் தந்தையின் அங்கத்தை தகனஞ்செய்யுங்கால் சுடலையில் நடனமாடியவரும் அவரேயாதலின் அவரை நடராஜன் நடராஜன் என அக்காலத்திலேயே கொண்டாடியிருக்கின்றார்கள். செயலுமுண்டு சரித்திரமுமுண்டு.

- 6.52; சூன் 4, 1913 –
 

109. மறையோர்

வினா : "மறையோர்" என வழங்கும் பெயர் புத்தபிரானுக்குரியதா அன்றேல் பொறாமெயை பூஷணமாய்ப்பூண்டு நூதனமாய்த் தோன்றியுள்ள வேஷப்பிராமணருக்குரியதா.

வி. துரைசாமி, ஷக்லாஸ்பூர்.

விடை : அன்பரே! தாம் வினாவிய சங்கை விசேஷித்ததேயாம். முத நூலென்றும், ஆதிவேதமென்றும், ஆதியாகமமென்றும், ஆதிமறையென்றும் வழங்கும்படியான நீதி போதம் ஆதிமுநிவன், ஆதியங்கடவுள், ஆதி சிவன், ஆதி பகவன் என வழங்கப்பெற்ற புத்தபிரானால் ஓதியவைகளேயாம்.

சூளாமணி


ஆதியங்கடவுளை யருமறை பயந்தனை / போதியங்கடவுளை பூமிசை யொதிங்கினை போதியங்கடவுளை பூமிசை யொதிங்கிய சேதியென்சொல்லனின் றிருவடி வணங்கினம்.

சீவகசிந்தாமணி

ஆதிவேதம் பயந்தோய்நீ யலர்மும்மாரி பொழிந்தோய்நீ

என்னும் சார்பு நூற்களினாதாரங் கொண்டு புத்தசங்கங்களில் நிறைந்திருந்த சமணமுநிவர்கள் யாவரும் ஆதிமறையென்று வழங்கு வாக்கியங் களை விளங்கப் போதித்தலால் அவர்கள் மறையோரென்றும், ஆதிவேத மென்னும் அவற்றையே விளக்குதலால் வேதியரென்றும், காலந்தவறாது வேதத்தைப் பார்ப்போரும் தன்னைப்பார்ப்போருமாதலின் பார்ப்பா ரென்றும், சமண நிலை முதிர்ந்து சாந்தம் நிறைந்து சருவ உயிர்களையுந் தன்னுயிர்போல் காப்போரை அந்தணரென்றும் வழங்கிவந்தார்களென்பது சரித்திரங்களிலும் சாஸ்திரங்களிலும் பரக்க விளங்குதலால் அறஹத்துக் களுக்கே மறையோ ரென்னும் பெயர் பொருந்துமேயன்றி ஏனய வேஷப்பிராமணர்களுக்கு அப்பெயர் பொருந்தவே பொருந்தாவாம். ஈதன்றி களங்கமற சகலமக்களுக்கும் மறையை விளக்குவோருக்கு மறையோரென்னும் பெயர்த்தகும் மறைமொழி வினவும் அவனுக்கு மறையை விளக்கலாம் இவனுக்கு மறையை விளக்கலாகாதென்பது மறை யாகாவாம். அவற்றை விளக்குவோரும் மறையோ ராகாரென்பது திண்ணம் திண்ணமேயாம்.

- 7.3; சூன் 25, 1913 –
 

110. நிருவாணமும் பரிநிருவாணமும்

வினா : ஐயா, யான் மதுரை வடக்குவீதி தெப்பக்குளத்தினருகே உலாவிவரும்போது அங்குள்ளக் கன்மேடையின் மீதில் ஓர் எம்.ஏ. பிரபசரும், பி.ஏ.எல்.டி யும் உழ்க்கார்ந்து புட்டீசம் பேசும்போது நிருவாணமென்பதற்குப் பதிவான மறுபொருள் என்னையென்று கேட்டார். அதற்கு எம்.ஏ. அவர்கள் கருவிகரண அமைதியே என்றார். அவ்வகை அமைதியுற்றோர் தற்காலம் எவரேனுமுளரோ வென்றார். காணேனென்றார். புத்தர் நிருவாணம்பெற்று நெடுங்காலங்களுக்குப்பின்னர் பரிநிருவாணம் பெற்றாரென்றும், தேகத்தை தகனஞ்செய்து விட்டார்களென்றுங் கூறுகின்றார்களே அதன் பொருளென் னை என்றார். அதற்கு எம்.ஏ. அவர்கள் சற்று நிதானித்து அந்த பொருள்தான் சரிவர விளங்கவில்லை, (ஸைன்ஸ்) படிக்கு விசாரிப்பதில் ஒன்றுமில்லா மற்போகின்றது; அதனை ஒன்றுமில்லையென்று கூறுவதற்கும் ஆதாரங் காணோம். அவ்வகை ஒன்றுமில்லையென்பதாயின் முதலாவது நிருவாண