பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 123

உயரம் 85 அடி. நிலத்தில் வேர் ஊன்றிய விழுதுகள் 464. அது நிற்கும் நிலப்பரப்பு 1 ஏக்கர். சத்தாரா (மகா ராட்டிரம்) மாவட்டத்தில் வைசத்கர் கிராமத்தில் ஒரு மரம் கி-மே 442 அடி, தெ-வ 595 அடி, முடியின் சுற்றளவு 1587 அடி இருந்ததென்றும், ஏழாயிரம் மக்கள் தங்கக்கூடிய ஒரு மரம் நருமதையாற்றுத் திட்டு ஒன்றில் இருந்ததென்றும், இருபதினாயிரம் மக்களுக்கு நிழல் தரக் கூடிய மரம் ஆந்திரப் பள்ளத்தாக்கில் இருந்ததென்றும் அறியப்படுகின்றன.

இது, 1954- இல் வெளியான தமிழ்க் கலைக் களஞ்சியம்- முதல் தொகுதியில் உள்ளது. கல்கத்தாவில் உள்ள ஆலமரம் இப்போது இன்னும் விரிவடைந்திருக்கலாம் அல்லவா? தமிழ் நாட்டில் சென்னை- அடையாறில் உள்ள ஆலமரமும் இங்கே குறிப்பிடத் தக்கது. ஓரளவு மிகவும் பெரியதாகிய இந்த ஆலமரம் பலரும் சென்று பார்க்கும் காட்சிப் பொருளாக உள்ளது. அண்மையில் இதில் சிதைவு ஏற்பட, பின்னர் ஒரளவு சரி செய்யப் பட்டுள்ளது.

சுமந்திரன் மீட்சிப் படலம்

முதலிய

தன்னை அழைத்துச் செல்ல வந்த சுமந்திரனிடம் இராமன் பின்வருமாறு ஆறுதல் மொழி கூறி அனுப்புகிறான்:

முந்தினை முனிவனைக் குறுகி முற்றும் என்
வந்தனை முதலிய மாற்றம் கூறி..

. (32)

என்பது பாடல் பகுதி. இங்கே, பலரும் எளிமையாகப் பயன்படுத்துகிற முதலிய என்னும் சொல்லாட்சியைக் காணலாம்.