பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 - சுந்தர சண்முகனார்


பெண்ணாக- ஓர் எடுத்துக்காட்டுப் பெண்ணாகச் சீதை. விளங்குகிறாள் என்னும் பொருளில் கட்டளை' என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே (33):

என்று இராமன் சீதையை விளிக்கிறான்.

மிதிலை நாடியர்

நாடன் என்னும் ஆண்பால் பெயருக்கு நேரான பெண்பாலாக 'நாடி' என்னும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. சீதை மிதிலை நாட்டாள்' என்னும் பொருளில் மிதிலை நாடி என்று குறி ப் பி ட ப் பட்டுள்ளாள்:

வேறிடம் வீரற்கும் மிதிலை நாடிக்கும்
கூறின நெறிமுறை குயிற்றி

(46)


என்பது பாடல் பகுதி. இலக்குவன் இராமனுக்கும், சீதைக்கும் தனியிடம் அமைத்துக் குடில் காட்டினானாம்.

பள்ளி படைப் படலம்

திருமுகம்

கடிதம் 'திருமுகம்' என்னும் அழகிய- மங்கலமான பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. தயரதனது மடலைத் தூதர்கள் பரதனிடம் தந்தார்களாம்.

கொற்றவன் திருமுகம் கொள்க என்றார் (4)

என்பது பாடல் பகுதி.

வில்லின் வேதியர்

பரதன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்குப் புறப் பட்டபோது, வில்லின் வேதியர் முதலான படைஞர்களும்