பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 161


என்பது பாடல். இதிலுள்ள உயிரினும் ஒழுக்கம் நன்று' என்னும் தொடர்,

ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

(131)

என்னும் திருக்குறளிலிருந்து பெறப்பட்டதன்றோ?

நிறையும் பொறையும்

நாடு திரும்பும்படி இராமனை வற்புறுத்தும் பரதன் பின் வருமாறு ஒரு கருத்து மொழிகிறான்: நிறை (கற்பு) நீங்கிய பெண்மையும், பொறுக்கும் ஆற்றல் இல்லாத தவமும், உண்மையான அருள் உள்ளம் இன்றிக் கடமைக்காகச் செய்யும் அறமும், மூத்தவனுக்கே பட்டம் என்னும் தொல்லோரின் முறையினின்றும் நீங்கிய அரசும் சிறப்புற மாட்டா என்று கூறுகிறான்:

நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்
பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ?

(100)

என்பது பாடல். மகளிர் நீர்மை = பெண் தன்மை = பெண்மை. இந்தப் பாடலின் முதல் அடியில், மகளிரைச் சிறையிட்டுக் காக்கும் காப்பு உண்மைக் காப்பாகாது; அவர்கள் தம் நிறையைத் (கற்பைத்) தாமே காத்துக் கொள்ளும் காவலே தலைமையான காவலாகும் என்னும் கருத்துடைய

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை

(57)

என்னும் குறளின் நீரோட்டத்தைக் காணலாம். அடுத்த இரண்டாம் அடியில், தமக்கு நேர்ந்த துன்பைப் பொறுத்துக் கொள்ளுதலும் எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்காதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்னும் கருத்துடையஅ. ஆ.-11