பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 - சுந்தர சண்முகனார்


அறிகிறது- கால் என்னும் செயல் பொறி நடமாடுகிறது. காற்று அடிக்கும் திசையில் நடப்பது எளிதல்லவா? தீ என்னும் பூதத்தின் உதவியால், கண் என்னும் அறிவுப் பொறி ஒளி என்னும் புலனை அறிகிறது- கை என்னும் செயல் பொறி பல செயல்களைச் செய்கிறது. அவருக்குச் சூடு பிடித்து விட்டது- அதனால்தான் இவ்வளவு வேலை செய்கிறார் என்னும் உலக வழக்கு ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. நீர் என்னும் பூதத்தின் உதவியால், வாய் (நாக்கு) என்னும் அறிவுப் பொறி சுவை என்னும் புலனை அறிகிறது- மலம் கழிக்கும் உறுப்பு என்னும் செயல் பொறி மலம் கழிக்கிறது. வாயில் ஊறும் நீருடன் சென்றாலேயே உணவு சுவைக்கும்- எளிதில் செரிக்கும். மலச்சிக்கல் இருந்தால் நிறைய நீர் குடிப்பது நல்லது. மண் என்னும் பூதத்தின் உதவியால், மூக்கு என்னும் செயல் பொறி நாற்றம் (மணம்) என்னும் புலனை அறிகிறது- ஆகாயப் பூவுக்கு மணம் இல்லை' என்பது கருதத்தக்கது- பால் உறுப்பு என்னும் செயல் பொறி விந்து விடுகின்றது- உடம்பில் நகம், மயிர் முளைப்பது மண் தன்மையினாலேயாம்.

எனவே, ஐம்பூதங்களால் ஆன உடம்பு, அந்த ஐம்பூதங்களின் உதவியாலேயே இயங்குகின்றது என்பது புலனாகும். எல்லாமாக உள்ள இந்த ஐந்து மூலப் பொருள்களும் உலகின் ஊழிக் காலத்தில் அழிந்து விடுமாம்.

எனவே, அகவை முதிர்ந்த தயரதனுடைய உயிர் பிரிந்து விட்டதற்காக நீ வருந்தலாமா?- என்று கூறி வசிட்டன் இராமனைத் தேற்றுகிறான்.

பரதனும் பாதுகையும்

இராமனிடமிருந்து பாதுகையைப் பெற்றுத் தலையில் சுமந்து கொண்டு சென்ற பரதன் நேரே அயோத்திக்குச்