பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 231


செல்லவில்லை. இரவு முழுவதும் தூங்காமல், அயோத்திக்குப் புறத்தே உள்ள நந்தியம் பதியை அடைந்தான். அங்கே பாதுகையையே ஆட்சித் தலைவனாக எண்ணி வைத்து இயங்கினான். இரவு பகல் தூக்கம் இல்லை. பொறி- புலன் உணர்வுகளையெல்லாம் அடக்கிக் காலத்தை ஒட்டினான்.

பாதுகம் தலைக் கொடு பரதன் பைம்புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான் போதுகும் கடிபொழில் அயோத்தி புக்கிலன்
ஒது கங்குலின் நெடிது உறக்கம் நீங்கினான்

(139)

நந்தியம் பதியிடை நாதன் பாதுகம்
செந்தனிக் கோல்முறை செலுத்தச் சிந்தையான் இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்

(140)

இராமனது செலவு

இங்கிருந்தால் அன்பினால் மக்கள் நலிவார்கள் என்று எண்ணி, இராமன் தன் தம்பி இலக்குவனுடனும் சீதையுடனும் மேலும் தென்திசை நோக்கிச் செல்லலானான்:

குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா
தன்துணைத் தம்பியும் தானும் தையலும் தென்திசை நெறியினைச் சேறல் மேயினான்

(141)

இந்தப் பாடலோடு கம்பராமாயணம்-அயோத்தியா காண்டம் முற்றுப் பெறுகிறது. அயோத்தியா காண்டம் என்னும் ஆழ்கடலில் உள்ள முத்துகள் கம்பன் தந்தவை. கம்பனுக்கு நன்றி. கம்பன் புகழ் வாழ்க. கன்னித் தமிழ் வாழ்க. வணக்கம்.