பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நினைவுகள் சில...






மிழ் என்றால், புறநானூறு தமிழ் என்றால், அகநானூறு! தமிழ் என்றால், திருத் தொண்டர் மாக் கதை! தமிழ் என்றால், தொன்மொழி!

தமிழ் என்ற சொல்லுக்கு வீரம் என்று ஒரு பொருள்! அதுதான் புறநானூறு!

தமிழ் என்ற வார்த்தைக்கு காதல் என்று ஒரு பொருள்! - அதுதான் அகநானூறு!

தமிழ் என்ற பதத்திற்குப் பக்தி என்று ஒரு பொருள்! - அதுதான் திருத் தொண்டர் மாக் கதை எனப்படும் பெரிய புராணம்.

தமிழ் என்ற சொல்லுக்கு, அழுது கொண்டே பிறக்கின்ற குழந்தை - உலக நாகரிகத் தொட்டிலிலே ஊஞ்சலாடி, 'பிள்ளைத் தமிழ்'ப் பண்பாடுகள் பாடி, சிரித்துக் கொண்டே அது சாகின்ற வரை, பண்டைய சிந்து வெளி - லெமூரிய நாகரிக இனம் பேசுகின்ற - ஒரு தொன் மொழி என்றும் பொருளாகும். எனவே, தமிழ் என்ற சொல்-வீரம்-காதல் - பக்தி - இனிமை -நீர்மை, நனி நாகரிக மொழி என்ற பல்பொருள் வழங்கும், ஓர் அற்புதச் சொல்லாகும்!

வீரத்தால், வியனுலகில் எதனையும் விளைவிக்கலாம்! ஆனால், அது இயற்கை ஆற்றல்களை எப்பொழுதும் வீழ்த்திட இயலாது.

காதலால், எங்கும் - எதனையும் கை கொள்ளலாம்! ஆனால், எல்லா இடங்களிலும் அது வெற்றி பெறாது.

அறிவும் - அன்பும்-உணர்வும்-இணைந்து, அவை பக்தியாக, அனுபவம் பெற்ற ஆற்றலாக வழிபடும் போது, மனநிறைவு என்ற

118