பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காஞ்சி ஒரு சிற்றாய்வு




லகம் ஏன் தோன்றியது, என்ற வினாவை முதன்முதலாகக் கேட்டவன் மெய் ஞானியானான்!

எப்படித் தோன்றியது இந்த மேதினி, என்ற கேள்வியை எழுப்பியவன், விஞ்ஞானியானான்!

இந்தப் பார் தோன்றியது எதற்காக, என்ற ஆய்வைப் புரிந்தவன் பகுத்தறிவாளன் ஆனான்!

இந்த மூன்று வினாக்களையும் முழுமையாகக் கூர்ந்து, ஓர்ந்து, புரிந்து, உணர்ந்து செயல்பட்டவர் - அறிவுலக - அற்புதர் ஆதிசங்கரர்!

அந்த ஞானச் சிற்பியின் அவதார அற்புதங்களை, அன்றாடம் பயிராக்கும் விளைநிலம்தான், காஞ்சி சங்கரர் மடம்.

காஞ்சி என்று அழைக்கப்படும் இன்றைய காஞ்சிபுரம் மாநகர், பன்னூறு ஆண்டுகட்கு முன்னர், உலக வரலாற்றுப் பொன்னேடுகளின் ஒரு பக்கமாகத் திகழ்ந்து, புகழ் பூத்த கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் - மாநகராகப் பொலிவு பெற்றிருந்தது.

ஏதென்ஸ் நகரிலே தோன்றிய அறிவுலக ஞானி சாக்ரடீசைப் போல அரசியல் வரலாற்றுக்குப் பொருளாதார அரிச்சுவடியாக விளங்கும் அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் முதல் பொருள் நூலை, உலகில் முதல் முதல் எழுதிய சாணக்கியன் பிறந்த ஊரும் இதே காஞ்சிபுரம்தான் என்ற சரித்திரச் சான்றுமுள்ளது.

காலத்தால் அழிக்க முடியாத கவின்மிகு கற்கோயில்களை எழுப்பிய பல்லவப் பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிப் புகழ் பெற்ற நகரமே இன்றைய நமது காஞ்சிபுரம் மாநகர். உலக நாடுகளுக்குச் சகல கலா வல்லுனர்களை வழங்கிய ஹர்ஷன்

136