பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


இந்த ஆன்மிக நடைப் பயணத்தில், அவரது அருளாட்சிக்கு மங்கிய மக்கட் புலன்கள், ஞானப்பித்தேறிச் சுழன்றன.

அருள் அவா பெருக்கெடுத்தோர், அந்த ஞானச்சுடர் பின்னே அணிவகுத்தனர். அன்று அவர், ஒர் ஆன்ம வீரரைப் போலச் சேவார்த்திகளுக்குக் காட்சி தந்தார்.

தியான மோனத்தின் பயிற்சி, அந்த ஞானியின் திரேகத்தில் மின்னலென மின்னியது.

மக்கள் மனக்கடலிலே மறைந்துள்ள அஞ்ஞானப் பாசிகளைத் தமது ஞானப் பொலிவால் மறக்கடித்தார்.

அன்பெனும் நீரைப் பாய்ச்சினார். அருளெனும் அறுவடையை அளித்தார்.

அரசியல்வாதிகளைப் போல சொன்மாரிகளைப் பொழிந்தா அந்த அருள் விளைவை ஆற்றினார். இல்லை !

மனமும் வாக்கும் மெளனமுற, உடல் மோனத்தைக் கடந்து, மனோ மோனத்திலே மிதந்து, இறை மோனத்திலே ஒன்றிய அவர், அறிவுச் சுடராக ஒளி வழங்கினார்.

அத்தகைய ஞான நாயகரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மிக நடைப் பயணத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

செருக்கும் - சினமும் - சிறுமையும் இன்றி, தமிழக வீதிகளிலே இன்றும் ஞான உலா வரும் அற்புத வாணி அருளாளர் ஜெயேந்திரர் அவர்கள்.

அற்றம் என்றால் அழிவு - கேடு என்றும் பொருள், பெருமையை அறுத்துச் சிறுமையை விளைவிப்பது அற்றம்.

ஞானத்தின் பெயரால், உருவால் அற்றம் விளைவிப்பவர்களும் உண்டு. அவர்களில் ஒருசிலரைப் பத்திரிகைகள் இன்றும் அடையாளம் காட்டுகின்றன.

ஆனால், அருட்திரு.ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மதத்தின் பெயரால் பிற மதத்தினருக்குள் தோன்றும் அந்த அற்றத்தை அறுத்து, சேவார்த்திகள் சுற்றத்தை நாளும் பெருக்கி, கற்றவரையும் மற்றவரையும் கண்ணாகக் கை தழுவி - அருளாட்சி புரியும் அற அன்பாளர் அவர்.

139