பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


- புகழப்படும் என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர் நமது ஞானமகான்.

மோனம் என்பதே மெளனம்தான். அது, அக மவுனம், புற மவுனம் என இருவகைப்படும்.

அக மவுனத்தை மன மவுனம் எனலாம். உடலுறுப்புகள் தத்தம் நிலை திரியாமல் அடங்கலே புற மவுனமாகும்.

இந்த இரு மோன நிலைகளால், திரு. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - காட்சிக்கு எளியராய் - கடுஞ் சொல்லற்றராய், அழுக்கறுத்த மெளனியராய் நாட்டில் பவனி வருவதை நாள்தோறும், நகர்தோறும் பார்க்கின்றோம்.

ஞானம். மூவகைப்படும். விண்மீன்களது ஒளியைப் போல அவ்வப்போது ஒளிரும் உயிர் அறிவை உபாய ஞானம் என்பர்.

நிலவொளி போலக் குளிர்ந்து தோன்றி அறியும் ஆன்ம அறிவு உண்மை ஞானம் எனப்படும்.

அனைத்தையும் அறிந்து அனுபவிக்கச் செய்கின்ற ஆதவன் ஒளி போன்ற இறையறிவே அனுபவ ஞானம்.

இந்த மூவகை ஞானங்களும் கைவரப்பட்ட ஞானக் கலைஞர் நமது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

அதனால்தான், மோரில் மிதக்கும் வெண்ணைத் திரள் மீண்டும் மோரில் ஒன்றாததுபோல, ஒர் அங்குலம் கூடத் தமது ஞானப் பாதையை விட்டு அவர் மறந்தும் பிறழாத வைர ஞானியாகத் திகழ்கின்றார்.

இல்லறத்தார், தத்தம் இல்லங்களிலே இறை உருவங்களைக் கிழக்குத் திக்கை நோக்கி வைத்தே வணங்குகிறார்கள். அதுபோலவே, கோயிலுக்குச் சென்றாலும் நாம் கிழக்கு நோக்கியே வணங்குகிறோம். ஏன்?

துறவறத்தார் தெற்கு நோக்கி வணங்கினால் ஞானம் கைகூடுமாம். அவர்கள் வடக்குப் பார்த்து வணங்கினால் சித்த கத்தி உருவாகும் என்பது மரபு.

இந்துக்களாகிய நாம், காஞ்சிபுரம் இருக்கும் திக்கை நோக்கியே வணங்குவோமாக! காரணம், காஞ்சிபுரம் நமது

145