பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமெரிக்கக் காந்தி..
மார்ட்டின் லூதர் கிங்



ரக்கம் குடி கொண்ட எந்த இருதயமும் இறப்புக்கு இரையாகி விடுகின்றது.

காலம், நீண்ட நெடியதோர் வரலாற்றைத் தீட்டி வருகின்றது.

கணக்கிறந்த பொன்னேடுகளாக, மேதினி போற்றும் மேதைகளிற் சிலர் - அவ்வப்போது அதற்குப் பாத்திரமாகி வருகின்றனர்.

மனசாட்சிக்கு எப்போதும் துரோகம் செய்யாதவர்கள், வசந்தக் காலக் குயிலின் ஒசையைப்போல, தங்களது கருத்துக்களை மிதந்து வரும் காற்றினிலே கலந்துவிடுகின்றனர். ஞானத்தின் திருப்பம், அந்தப் பெரிய மனிதர்களுடைய ஒழுக்கச் சீலத்திலே இருக்கின்றது.

எவனொருவன் தனது உயிரணுக்களைக் கவனமாகப் பாதுகாப்பது போல் - பிறரது உயிரணுக்களையும் பாதுகாக்கின்றானோ, அவன் உயரப் பறக்கின்ற சமாதானப் புறாவாக மாறுகின்றான்.

கரு நீல வானத்தில் நிலவு இருப்பதைக் கண்டிக்கவில்லை - மனித சாதி!

கருங்கடலில் முத்து இருப்பதை எவரும் எடுக்காமல் இருப்பதில்லை!

கருங் கூந்தலிலே அழகு தவழ்வதைக் கோபிக்கவில்லை - மனித சாதி!

கரிய மனிதனில் உயிர் இருப்பதை மட்டும் - ஏன் கோபிக் கின்றதோதெரியவில்லை?

ஒருவனுடைய உயிரை மற்றொருவன் எடுக்கும்போது -

77