பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


மனிதன் தாழ்ந்து போகின்றான்.

ஏனெனில், கொலைகாரனுக்கு, அவனுடைய உயிரின் மதிப்பே அவனுக்குத் தெரியவில்லை என்பதுதான்!

சந்தனம், சந்தனத்தோடு கலக்கவேண்டுமே தவிர, அதே சந்தனம், வேறொரு சந்தனத்தை விழுங்குவதில்லை.

இயற்கையோடு பேசக் கற்றுக் கொண்ட மனிதன், தத்துவங்களைத் தன் தாய் மொழியில் வடிக்கின்றான்.

அந்தத் தத்துவங்கள், கோயிலுக்கு முன்னாலே வேதமாகப் படைக்கப்படுகின்றன.

படிக்கப் படிக்க இனிக்கின்ற எழுத்துக்கள் உலகத்தில் இருக்கின்றதென்றால் - கருணை நெஞ்சத்தோடு ஒருவன் எழுதியவைகளே அவை.

எவனொருவன், சுதந்திரமாகத் தனது மனசாட்சியைப் பேச அனுமதிக்கின்றானோ, அவனுக்குப் புகழ் ஒய்வு நேரத்தில் கால் அமுக்குகின்றது - சாமரம் வீசுகின்றது - தேரிலே குந்த வைத்து வடத்தை இழுக்கின்றது.

எவனொருவன், தன் மனசாட்சியைப் பொய்யானத் தோற்றத்தால் கட்டிப் போடுகின்றானோ, அவனை, அவனுடைய மரியாதையே மதிப்பதில்லை.

முழுமையான ஞானம் பெற்ற ஒரு சித்தாந்த வடிவம் கொண்ட ஒர் உத்தமனை உருவாக்குவதற்கு, மனிதன் சூரியனில் காய்ந்து - மழையில் நனைந்து - குளிரில் வாடி- மிகவும் வேதனைப்பட்ட பிறகுதான் - சின்மயத்தில் இரண்டறக் கலக்கக் கூடிய ஒரு மனிதனை, அது உலகுக்குப் படைக்கிறது.

அத்தகைய நிலவினும் குளிர்ந்த படைப்புதான் டாக்டர் மார்டின் லூதர் கிங் என்ற அமெரிக்க காந்தி!

அவரது தந்தையும், தனயனும், வாழ்க்கை முழுவதும் சீர்திருத்தத்திற்காகவே போராடியவர்கள்! அதனால், மார்ட்டின் லூதர் என்ற சொல்லைச் சேர்த்துச் சூட்டிக் கொண்டார்கள். அவ்வாறு பெற்ற பெயர்தான் மார்டின் லூதர்கிங் என்ற பெயர். அவருடைய வாழ்நாளின் அடையாளம் - கடிகாரம் காட்டிய

78