பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


விட்டான் என்று கண்டித்தனர். தங்களிடம் பழகுவதால், தாங்களே மன்னனிடம் மெள்ள மெள்ள உண்மையைச் சொல்லலாம், ஆன் நல்ல நிலைமைக்கு வரஉதவிபுரியலாம் என்று முயன்றனர், முடியவில்லை.

ஹாடிபோர்ட், ஆன் சார்பாக மன்னனிடம் பேசத் தொடங்கியதும், மன்னன் கோபங்கொண்டு, அவளை விட்டு விலகினான். பிறகு, ஜோசப் பாதிரியின் உறவினளான, அந்த மங்கை, ரிஷ்லுவுக்கு விரோதமாக மன்னனைத் திருப்ப முயற்சித்தாள். பலிக்கவில்லை. அந்த மங்கையைக்கொண்டு மன்னனைத் தங்கள் வலைக்குள் போடலாம் என்று சிலர் முயன்றபோது, அவள் அதற்கும் இடம் தராமல், கன்னிமாடம் சேர்ந்துவிட்டாள். அவள் கன்னி மாடம் சேர்ந்த பிறகு கூட, மன்னன் அங்கு சென்று, மணிக்கணக்காக அவளிடம் பேசிக்கொண்டிருப்பானாம். அந்தப் பாவை, ரிஷ்லுவின் பிடியிலிருந்து மன்னன் விடுபட வேண்டும் என்பதையே வலியுறுத்தி வந்தாளாம்-இதனால் வெறுப்படைந்த மன்னன், கன்னிமாடம் செல்வதையே நிறுத்திக் கொண்டானாம். ரிஷ்லுவுக்கு எதிராக எவரேனும் ஏதேனும் சொன்னாலும், கேட்பதற்கு மன்னன் விரும்புவதில்லை. அவ்வளவு பற்று ஏற்பட்டுவிட்டது. ரிஷ்லுவுக்கு இந்தத் துணை இருக்குமட்டும் மற்றவர்களைப் பற்றிக் கவலை என்ன! மேரி அம்மையை அறவே புறக்கணித்தான்--அம்மையின் மனதிலேயோ, பகை முழுவடிவெடுத்தது. சமயம் வரவில்லை.

ன்னன், ஒரு சமயம் நோய்வாய்ப்பட்டான்--ஆபத்தான நிலைமை--மருத்துவர்களே, கடினம் என்று கூறிவிட்டனர். மகன் மரணப் படுக்கையில், அன்னைக்கு அக மகிழ்ச்சி! மகனிடம் கொண்ட வெறுப்பாலா? அது காரணமல்ல. எவ்வளவு வெறுப்பு இருப்பினும், பாசம் விடுமா, மகனை இழக்கத் தாய் விரும்புவாளா? காரணம், வேறு. மன்னன் இறந்துவிட்டால், ரிஷ்லுவைச் தொலைத்துவிடலாம் என்ற எண்ணம், அகமகிழ்ச்சியைத் தந்தது. ரிஷ்லுவின் கொடுங்கோன்மைக்கு ஆளாகி அவதிப்பட்டவர்கள் அனை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/77&oldid=1549060" இலிருந்து மீள்விக்கப்பட்டது