பக்கம்:அரசியர் மூவர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 ☐ அரசியர் மூவர்



என்றும் கேட்கிறாள். இராமனோ தந்தைக்குத் தவறு இழைப்பவன்? இவ்வாறு நினைக்கக்கூட அவள் மனம் வெதும்புகிறது. ஆனாலும், வேறு வழி இல்லை. எனவே, 'புவிக்கெலாம் வேதமேயன இராமனை'ப் பார்த்து, 'நீ தவறு இழைத்தாயோ?' என்று கேட்கிறாள்.

அறக் கடவுளின் துணை வேண்டல்

இதனை அடுத்து மகன் தவறு செய்யாதவன் என்ற எண்ணமும் மீதுார, அத்தாய் பிறர்மேல் குற்றம் காணவியலாமல், அறக் கடவுளை நோக்கித் துணை வேண்டுகிறாள். 'அறம் எனக்கு இல் லையோ? என்னும், 'ஆவிநைந்து இறவு அடுத்தது என் தெய்வதங்காள்!' என்னும்" (1618) ("அறக் கடவுளே, நீயாவது எனக்குத் துணையாக இருக்கமாட்டாயா? தெய்வங்களே, இவ்வளவு தீவினை என்னை வந்து அடுப்பதற்கு யான் என்ன தவறு இழைத்தேன்?" என்று அலமருகிறாள்). இவ்வாறு கூறி அத்தாய் மயக்கமுற்றுக் கீழே விழ, உடனே இராமன் அவளைக் கையில் தாங்கிக் கொண்டான். இடர்க்கடலில் வீழ்ந்து நையும் தாயை நோக்கி இராமன் கூறும் சொற்கள் ஆய்தற்குரியன.

“இத்தி றத்தின் இடர்உறு வாள்தனைக்
கைத்த லத்தின் எடுத்து, அருங் கற்பினோய்!
பொய்த்தி றத்தினன் ஆக்குதி யோபுகல்
மெய்த்தி றத்துநம் வேந்தனை நீ'எனும்” (1619)

இந்த நிலையில் இடர் உற்ற தாயைக் கைகளால் எடுத்து, 'அரிய கற்பினை உடையவளே, மெய்ம்மை கூறும் மன்னனைப் பொய் பேசுபவனாக்கப் போகிறாயா?' என்றான்.

மைந்தன் அறவுரை

'அவசமுற்ற நிலையில் உள்ள தாயை அமைதி கூறிச் சாந்தப்படுத்த வேண்டிய இராமன் இவ்வாறு கூறலாமா?' என்று கூடக் கேட்கத் தோன்றுகிறது. 'மெய்ம்மைக்கு உறைவிடமான நம் மன்னனை நீ பொய்யுடையவன் ஆக்குவது முறையோ?' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/106&oldid=1496905" இலிருந்து மீள்விக்கப்பட்டது