பக்கம்:அரசியர் மூவர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 ☐ அரசியர் மூவர்


 'சலம் பிறிது உற' என்ற சொற்களால் பரதன் மேல் கோசலை கொண்டிருந்த கோபம் தணிந்த செய்தியைக் கவிஞன் கூறுகிறான். அவ்வாறு அவள் ஆராயாமல் கோபம் கொண்டிருந்தது முறையா என்று நினைக்கும் நம் போன்றவர்கட்கு விடை கூறுமுகமாக அவளுடைய பொறுமை, குடிப் பிறப்பு, கற்பு என்ற இவற்றை நினைவு ஊட்டுகிறான். இத்தனை பெருமையுடைய கோசலை ஒரு தவறு செய்வாளாயின், அதில் ஒரு கருத்து அடங்கி இருக்கும் என்ற குறிப்பே அங்குக் கிடைகிறது.

இதன் பின்னர் அவள் பேசும் பேச்சுத்தான் அவள் பெண் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆண் மகனாய் இருப்பின், இவ்வளவில் தான் கொண்ட ஐயம் நீங்கப்பெற்றிருப்பான். ஆனால், பெண்ணாகிய கோசலை பரதன் வாய் மூலமாகவே அவன் குற்றம். அற்றவன் என்பதைக் கேட்டுவிட விரும்புகிறாள். இச்செயல் கொஞ்சம் அதிகப்படி என்றுதான் நினைய வேண்டி உளது.

“மையறு மனத்தொரு மாசு ளான்அலன்
செய்யனே என்பது தேரும் சிந்தையாள்,
'கைகயர் கோன்மகள் இழைத்த கைதவம்
ஐயநீ அறிந்திலை போலு மால், என்றாள்." (2197)

'உன் தாயின்செயலை நீ அறியவில்லையா? என்று கேட்க வேண்டியகோசலை, பண்பாடுடையவள் ஆதலால், அதனை மாற்றிக் கூறுகிறாள். உன் தாய் என்று சுட்டிக்கூறினால் பரதனுடைய வருத்தம் மிகுதிப்படும் என்று நினைத்த கோசலை, “கைகயர் கோன் மகள்" என்று தன் மாற்றாளைக் குறிக்கிறாள். இது கேட்ட பரதன் பெருந்துயர் அடைந்தவனாய்த் தனக்குக் கைகேயியின் சூழ்ச்சி இது வரை ஒன்றும் தெரியாது என்பதைக் குறித்துப் பல வஞ்சினங் கூறி எடுத்துக் காட்டினான். உடனே கோசலையின் மனம் மாறி அவனை இறுகத் தழுவிக்கொண்டு வாயும் மனமும் குளிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/122&oldid=1496814" இலிருந்து மீள்விக்கப்பட்டது