பக்கம்:அரசியர் மூவர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|||இளைய மென்கொடி ☐ 131



இராமன் கமித்திரையைச் சந்திக்கும் இடத்தில் அவள் நடந்து கொள்ளும் விதம் இவ்வாறு பொருள் கொள்வது சரியே என்று சான்று பகர்கிறது. இராமன் பெருஞ்சீற்றத்துடன் இருந்த இலக்குவனை அமைதி யடையச் செய்தபின் இருவரும் சுமித்திரையிடம் செல்கின்றனர். இதற்குள் அப்பெருமாட்டிக்கு எவ்வாறோ செய்தி எட்டிவிட்டது. வருகின்ற மைந்தர் இருவரும் காடு செல்லும் உறுதியுடன் வருகின்றனர் என்ற கருத்துடன் அவர்களை அத்தாய் பார்க்கிறாள்.

“கண்டாள் மகனும் மகனும் தனகண்கள் போல்வார்
தண்டா வனம்சார் வதற்கே சமைந்தார்கள் தம்மை ;
புண்தாங்கு நெஞ்சத் தினளாய்ப் படிமேற்பு ரண்டாள்
உண்டாய துன்பக் கடற்குஎல் லைஉணர்ந்தி லாதாள்.”
(1744)


(தன் இரு கண்கள் போல்வாராகிய பெற்ற மகனும் பெறாத மகனும் வனம் சேர்வதற்குத் தயாராக வருவதைக் கண்ட சுமித்திரை, புண் நிறைந்த நெஞ்சத்தை உடையவளாகி பூமிமேல் விழுந்து புரண்டாள்.)

இருவரும் வருவதைக் கண்டாள் அவள், ஆனால், இராமன் காடு செல்ல வேண்டும் என்றுதான் கைகேயி கட்டளை இட்டாளே தவிர, இலக்குவனைப் பற்றி அவள் ஒன்றும் பேசவில்லையே! அவனும் வனம் போகப்போகிறான் என்று சுமித்திரையிடம் யார் கூறினார்கள்? இலக்குவன் தானும் உடன் வருவதைக் குறித்து (இராமனிடம் கூட) ஒன்றும் கூறவில்லையே அவ்வாறிருக்க, இருவரும் வனம் புகப் போகின்றனர் என்று சுமித்திரை நினைக்க என்ன நிகழ்ந்தது? ஒன்றும் இல்லை, என்றாலும், மகன் செல்லப் போகிறான் என்ற முடிவுடன் இருக்கிறாள் (அத்தாய்) என்றால், தான் பெற்ற மகன் என்ன செய்வான் என்பதை அறிந்திருந்தாள் என்பதே கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/133&oldid=1496849" இலிருந்து மீள்விக்கப்பட்டது