பக்கம்:அரசியர் மூவர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 ☐ அரசியர் மூவர்


 தாய் துயரும் மகன் விடையும்

இந்த அடிப்படையில் சுமித்திரையைக் காணும்பொழுது அவள் செய்த செயலின் உட்கருத்தை நன்கு உணர முடிகிறது. மைந்தர் களைக் கண்ட மாத்திரையில் தரைமேல் வீழ்ந்து புரண்டு அழுத சுமித்திரையை மைந்தர் இருவரும் தேற்ற முற்படுகின்றனர். அவளுக்கு மன அமைதி கூறவந்த இராகவன் கூறியவார்த்தைகள் ஆழ்ந்து நோக்கற்குரியன.

“சோர்வாளை ஒடித் தொழுதுஏத் தினன்துன்பம் என்னும் ஈர்வாளை வாங்கி மனம்தேற் றுதற்குஏற்ற செய்வான்
'போர்வாள் அரசர்க்கு இறைபொய்த் தனன்ஆக்க
கில்லேன்
கார்வான் நெடுங்கான் இறைகண்டு இங்ஙணமீள்வன்,' என்றான்." (1745)

(மனம் சோர்ந்து வீழ்ந்த கமித்திரையின் திருவடிகளில் தொழுது அவள் மனத்தில் பதிந்த துன்பம் என்னும் வாளை எடுத்துவிட்டு மனந்தேற்றவந்த இராமன் கூறினான் : "சக்கரவர்த்தியைப் பொய்யனாக்க யான் விரும்பவில்லை. காட்டைச் சற்றுப் பார்த்துவிட்டு உடன் மீண்டு விடுகிறேன்.")

இப்பாடலின் மூன்றாவது அடி கவனித்தற்குரியது. 'அரசனைப் பொய்யனாக்க யான் விரும்பவில்லை, என்று இராமன் ஏன் கூற வேண்டும்? அரசன் பெயரிலோ, கைகேயி பெயரிலோ சிறிதும் ஐயங்கொள்ளவில்லையே சுமித்திரை கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் இன் னும் வெளிவரவில்லையே! அவ்வாறு இருக்க, இராமன் இதனை ஏன் கூறவேண்டும்? இதனை முதலிற்கூறிவிட்டு அடுத்தபாடலில், 'யான் எங்கிருப்பினும் அதுவே எனக்கு அயோத்தியாகும். எனக்கு யார் துன்பஞ் செய்யப்போகிறார்கள்? நீங்கள் என்பொருட்டுச் சிறிதும் வருந்த வேண்டா,' என்று கூறுகிறான். இது முறைதான். வருந்துகிறவர்களை 'வருந்த வேண்டா,' என்பதற்குக் காரணம் காட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/136&oldid=1496853" இலிருந்து மீள்விக்கப்பட்டது