பக்கம்:அரசியர் மூவர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைய மென்கொடி ☐ 143


 காட்டுவழியில் எங்கள் இருவரோடும் செல்லப் புறப்பட்டபொழுது 'இளையாய்! அறிவுடையோனே! உனக்கு மூத்தவனாகிய இராமன் விதியால் இறக்க நேரிட்டால் அவனுக்கு முன்னரே முடிந்துவிடு,' என்று கூறிய உன் தாயாரின் வார்த்தைகளைக் கடைப்பிடித்து விட்டாயோ!' என்ற கருத்தில்,

"மேதா! இளையோய் விதியார் விளைவால்
போதா நெறிஎம் மொடுபோ துறுநாள்
'மூதான் அவன்முன் னம்முடிந் திடு'எனும்
மாதா உரையின் வழிநின் றனையோ?” (8689)

என்றும் கூறியழக் கேட்கிறோம்.

இரண்டு பாடல்கள் அளவே வாய் திறந்து பேசும் சுமித்திரையை ஓரங்குல உயரத் தந்தத்தில் கடைந்து செய்யப்பட்ட ஒப்பற்ற சிற்பமாகச் செய்து விட்டான் கம்பநாடன்! அவள் கூற்றாகிய இரண் டாம் பாடலை நோக்க, அவள் கோசலையினும் மேம்பட்டவளாகவே காட்சியளிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/145&oldid=1496896" இலிருந்து மீள்விக்கப்பட்டது