பக்கம்:அரசியர் மூவர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 ☐ அரசியர் மூவர்



அறிவுத் திறம்

எதனை எவ்வாறு கூறினால் பயன் விளையும் என்பதை நன்கு அறிந்து கூறும் திறம் படைத்த கூனியின் அறிவுத் திறத்தை நாம் பாராட்டாமல் இருக்க இலயாது. என்றாலும், அவள், அறிவைத் தீமை புரியவே செலவிட்டாள் என்பதை நினைக்க, வருந்தாமல் இருக்கவும் முடியவில்லை. அவளுடைய ஆழ்ந்த தீமை, தனியே காணும் பொழுதும் ஆத்திரம் ஊட்டுவதாகவே உளது. என்றாலும், வஞ்சகத்தை நேர்மையின் அருகிலும் தீமையை நன்மையின் அருகிலும் வைத்துக் கண்டால் தான் உள்ளவாறு அவற்றின் கொடுமையை அறிய முடியும். எனவே, கவிஞன் கூனியின் கொடுமையைக் கைகேயியின் நன்மையின் எதிரே நிறுத்தி, இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறான்.

கைகேயியின் அரண்மனையை அடைந்த கூனி, அவள் உறங்குவதைக் கண்டு, அவள் கால்களைத் தொட்டு, அவளுக்கு விழிப்பு உண்டாகுமாறு செய்தாள். விழித்து எழுந்த கைகேயி, முற்றிலும் துயில் நீங்கப்பெறாதவளாய், கூனி எழுப்பியதன் காரணத்தை அறிய இயலாதவளாய், விழிக்கிறாள். அந்நிலையில் கூனி பேசுகிறாள். “மிகு நஞ்சு பொருந்திய பாம்பு, தன்னை விழுங்குவதற்காக அருகில் வரவும், அதுபற்றிக் கவலை கொள்ளாமல் ஒளி விட்டு விளங்குகின்ற சந்திரனை ஒத்து, பெரிய துன்பம் உன்னை வந்து அணுகவும் இப்படிக் கவலை இல்லாமல் உறங்கலாமா?” என்ற கருத்துப்பட

"அணங்குவாள் விடஅரா அணுகும் எல்லையும்
குணங்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல்
பிணங்குவான் பேரிடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவாய் அல்லைநீ உறங்கு வாய்,' என்றாள்."(1451)

இதனைக் கேட்ட கைகேயி சிறிதும் பதற்றம் அடையவில்லை. "அரசரிற் பிறந்து பின் அரசரில் வளர்ந்து அரசரில் புகுந்து பேரரசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/16&oldid=1495428" இலிருந்து மீள்விக்கப்பட்டது